girl-silhouette-2

சிறுவர்களிடம் பொய் சொல்வது தவறு.

பொய்களை உண்மையாக நிறுவுவதும் தவறு.

கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்,

எல்லாமே நலமாக இருக்கிறதென்று அவர்களிடம் சொல்வதும் தவறு.

 

நீங்கள் சொல்வதை சிறுவர்கள் அறிவார்கள்.

சிறிவர்களும் மனிதர்கள்தான்.

சொல்லுங்கள் அவர்களுக்கு

கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை என்று.

எதிர்காலத்தை மட்டுமன்றி

நிகழ்காலத்தையும் அவர்கள் தெளிவாக அறியட்டும்.

சொல்லுங்கள் அவர்களை இடர்களை சந்திக்க நேரும்,

துயரமும், கடின உழைப்பும் நிகழுமென்று.

அவைகள் நரகமென்று.

மகிழ்ச்சியின் விலையறியாதவன்

மகிழ்ச்சியடைவது சாத்தியமில்லை.

நீங்கள் அங்கீகரிக்கும் எந்தத்

தவறையும் மன்னிக்காதீர்கள்.

அவை மறுபடி நிகழும், அதிகரிக்கும்,

அதன்பின் நம் மக்கள்

நாம் மன்னித்தவற்றை மன்னிக்க மாட்டார்கள்.

 யவ்டுஷங்கோ

தமிழில்: மோனிகா

Advertisements