-மோனிகா

ஏதோ ஒரு ஆற்றங்கரை மணலிற்

e0aeafe0aebee0aea9e0af88-e0aeaee0aea9e0aebfe0aea4e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d-2

படுத்துப் புரண்ட நாகரிகங்களைப் பேசிக் களைக்கிறோம் நாம்.

ஆறில்லா அவ்வூர்களில் குருதி நினைக்கிறது பூமியை.

கடவுளாக்கியும் பரத்தையராக்கியும் பழித்த

பெண் வயிற்றுப் பனிக்குடம் வளர்த்த உயிர்கள்

இன்று நாகரிகத்தின் குண்டொலியில் நசுங்கிச் சாகின்றன.

எவனோ ஒருவன் செல்வம் பெருக

வல்லோர் உலகில் உற்பத்தியான ஆயுதங்கள்

இல்லோர் உயிரைத் தேடி அலையும்.

அந்தோ அவலம்!

இதோ பிடியுங்கள், உரத்துப் படியுங்கள்

இந்துமாக்கடலின் உப்பில் கரையும் ரத்தத் துளிகளால்

இன்னும் ஒரு சரித்திரம் தயாராகிறது.

பனைகளுக்கு உரமாய் பச்சிளம் குழந்தைகள்.

கண்ணீரின் உப்பு கடலுடன் சேர

பெளத்தமும் அஹிம்சையும் திமிங்கிலம் விழுங்கும்.

போதி மரங்களை வெள்ளை மாளிகையில் நட்டுவிட்டனர்போல.

சொன்னாலும் சொல்வார்கள்

அங்குதான் நாகரிகம் அகல வேர்விட்டிருக்கிறதென.

ஓவியம்: மோனிகா

Advertisements