-தர்மினி

cloud-poem

எங்கோ ஓடிப் போன
ஒரு கூட்டம் முகில்களை
இங்கு வாவென இழுத்து வந்து
சங்கிலி போட்டுக் கட்டி வைத்து(ச்)
சாரல் தூவெனச் சொன்னேன்.
தூவெனத் துப்பிவிட்டு -அவை
உலர்ந்த முகில்களாக
நகர்ந்து போயின.

——–

விலகுதல் விலக்குதல்
அலட்சியப்படுத்தல்
ஆர்வமற்றிருத்தல்
பொறுப்பற்றிருத்தல்
புன்னகைத்தபடியே தட்டிக்கழித்தல்
புதிதாக எதுவுமில்லையென்பதாக
மெளனமாதல்
நீ எனக்குப் பொருட்டல்லவென்பதை
மறுதலிப்புகள் மறைமுகமாக உணர்த்தும்.

நன்றி : உயிர்நிழல் July-December 2008

Advertisements