-துமி

தேடுதலில்..

kollwitz

வாழ்தலுக்கான சுதந்திரம்

உள்ளும்,புறமும் பரந்து விரிந்த

தருணங்களில்

சுயத்தைத் தேடும் முயற்சியின்

பகிர்தலில்

ரணங்களே எஞ்சுவதாய்

சிதறுண்ட மனதின்

மரணத்தின் பின்னும் வாழும் மானுடம்

வெற்று உணர்வுள்ள

சதைப் பிண்டங்களாய்

 

அ-நித்தியம்

இழப்பு ஈடுசெய்யமுடியாதது

எல்லா உயிர்களுக்கும்

மரணத்தின் வாயிலில்

பேதமை இல்லை

எழுதிவைக்கப்பட்ட நாட்களை

கழிக்க வந்திருக்கும்

சூத்திரதாரி வாழ்க்கை இது

வாழ்ந்தது போதுமென

இருப்பே இறப்பாய்…

 

சாத்தான்

கூவியும் கதறியும்

பெற்றுப் பறித்த பார்வையாய்

தாய் முலை மரவா பிஞ்சை

பறித்துச் செல்லும்

கடவுளும் சாத்தான்தான்

என் அகராதியில்.

——–

என்றும்

படிமங்களாய் உறைந்துபோன

இதயத்தோடு உயிர் பிரியா

உடல்கள் உலவும் ஒப்பனையோடு

காவியங்கள் காலத்தால் அழியும்

கடற்கரையில் சிலைவைக்க

இடமின்றிப் போகும்

இயந்திரத்தால் மானுடம் சாகும்

இவை அனைத்தும் நடந்தும் கடந்தும்

இதோ என்றும்

நிலைமாறா பெண்மை..

ஓவியம்: கோல்விட்ஸ்

nuba69@gmail.com