தோட்பட்டைகளிற் செட்டைகள் ஒட்டின

-தர்மினி  women-in-snow

புலரும் பொழுது புதிதாகத் தெரியும்
மறந்து போன பாடல்கள்
மீண்டும் முணுமுணுக்கப்படும்.

கலிங்கு மீறிய குளமாக
உற்சாகம் உடைப்பெடுத்தோட
கசங்கிய ஆடைகளும்
கச்சிதமாக உடலிற் பொருந்த
என்/இவள்/அவள் கண்களில் மின்னல் தெறித்தோடும்.

தோட்பட்டைகளிற் செட்டைகள் இரண்டு ஒட்டியன போல
என்/இவள்/அவள்
கால்கள் இல்லைத் தரையில்.

எட்டிப் பிடித்த முதுமைதனை(த்)
தட்டி விசுக்கித் தரைவிட்டெழும்பி(த்)
தீர்நதுவிட்ட துணையின் காதலும்
புத்துயிர்ப்போடு பொங்க
மேலுமொரு காதல்
என்னை/இவளை/அவளை(ப்)
பட்டாம்பூச்சியாய்ப் பறந்திடச் செய்திடுமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s