-மோனிகா

dsc02351வால்டர் பெஞ்சமின் கதைத்த கந்தர்வர்

பிட்சா கடைகளில் வில்லையிட்டு நின்றனர்.

பூமித்துவாரத்தில் புகுந்தோடும்

மின்சாரப்பூச்சியின் உள்ளிருக்கையில்

ரம்பையரும் குசேலரும் நடனமாடினர்.

இன்னும் இன்னுமென பூச்சி நகர்கையில்

இடம் பெயர்ந்தன மூவுலகும் முப்பத்து மூன்று தலங்களும்.

இறங்குவதற்கான இடம் வந்தவுடன்

இனியும் வேண்டாமென நுழைவுச்சீட்டை விட்டெறிந்து

வேகம் பிடித்தனர் வீடுள்ளவர்கள்.

வீடற்ற வீட்டை விரும்பிய முனிகள்

பாதையோரத்தில் பதுங்கினர் அங்கே.

தூக்கம் வராமல் நடக்கத் தலைப்படின்

காதை நீட்டிக் கேட்டுப்பாரும்….

நட்சத்திரத்துடன் அவர் நாடக ஒத்திகை

பூமியுடன் அவர் புலன் விசாரணை.

நடையைக் கழற்றி முடிவில் எறிந்து

அருகில் அமர்ந்து அயர்ந்து பாரும்,

ஆற்றாமைத்துயர் ஆறிப்போகும்.

திரிசங்கு சொர்க்கம் தீர்ந்தே அழியும்.

Advertisements