எனக்கும் சுதந்திர பந்தாவுக்குமான கனவு

-ஸ்யாமெயின்-

1

காட்சி இல்லாத கதாபாத்திரம்
துக்கம்  நிறைத்த மூளை
தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம்.

நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டுwoman-running1
‘பலசோலி’ பற்றி
நடைமுறையில் விடைபெற்ற
முடிவான வீழ்ச்சிகளில் கருகிக் கருகி
என் தணல் உயிரற்றுபோனது.

மனதைக் குடிக்கும் மென்மை கண்டால்
நரம்புகூசி உயிர் நார்நாராய் கழன்று தசையறுக்கும்
வலிபறத்தும்
நோவு நனைந்த நரம்புகள் உச்சியிருந்து ஊறி மாயம் செய்யும்.

இறந்த உலகை ஏன் அவாவுவான்?
உறுதியோடு இறப்பைச் செருகு செருகு
அழி அழி அழி என்று வந்துபோகும் வதந்தி உணர்வுகள் முழுப்பலம் பொருதி விடுவி
பல்கடித்து நிம்மதிக்காய் நிமிர் என்றும் பேசும்.

தானாய் உதிரும் உணரும் தேவையின் தயவில்
மிதக்கும் மனிதருக்கும் வாழ்தல் கசியும்.

இதற்குள் அதற்கொரு அகில கரிசனை என்னே கேவலம்
அவர்கள் கத்துவார்

விடுதலை விடுதலை விடுதலை
வெட்டுருத்தும் கயவருக்கும் விடுதலை
சீ தூ நாயே.

பின்பவர்

பிடி தடவி பல்லுடைத்து
உதடு கடித்து
வெறியில் படுக்கை தடவும்
பிசாசுகளுக்கேன் பாசம்
அது வெறும் சொறிக்கதையும் சோறும் தின்னல்;

2

பிடித்தல் தடவுதல் பல்லுடைத்து வாழுதல்
பந்தா விட்டு வாழ்கிறார்

கதை கேட்டு எம் காதில் புகைவரும் –
சுவர் கவிழ்த்த சுதந்திரம் என்ற எடுப்பை கேள்விக்குட்படுத்து

எதுவுமில்லை.
நேரம் பார்த்து சுயம்சார்ந்து கருத்து தாவும் துச்சமான வாழ்தாண்டா தோற்றவளே நான்.
என் செய்ய?

வாழ்தலில் அலுத்துபோனேன்
காதலிலும் கண்டறியா சமூக இருத்தலிலும்கூட
அது உண்மை என்று அடித்துகூறும்
மூளை சந்தேகிக்கும்.
கேள்விகளில் குறுகி மீள்வதேயில்லை மடமூளை.

எவருக்காகவும் என்னிடம் எதுவுமில்லை.
மலைமலையாய் குவிந்த மிதப்பில்
அள்ளி அள்ளி கொடுக்க முடியுமென்ற கனவில்
முன்பு முண்டியடித்தது நினைத்து மனம் இளிப்பும் பளிப்பும் செய்யும்

புலம்பல்கள் சோர்வுதரும்
நானறியும் என் பற்றிய புள்ளிகள் சொற்பமே.

ஆக்கினைக்கும் அந்தர வாழ்வுக்கும் இடைவேளை சில கிடைக்கும்.
அதிற் தாவிப் பற்றமுதல் பறந்தொழியும் எனை விட்டு.

 

One thought on “எனக்கும் சுதந்திர பந்தாவுக்குமான கனவு

  1. ஜாஸ்மின்
    “ஆக்கினைக்கும் அந்தரவாழ்வுக்கும் இடைவேளை சில கிடைக்கும் தாவிப் பற்றமுதல் பறந்தொழியும்”
    தாவிப்பற்றுதல் என்றதும் பறந்தொழியும் என்பதும் உள்ளிருந்து உருவான வார்த்தைகளாய் என்னைக் கொல்கின்றது.

    தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s