அகமும் புறமும்

தர்மினி

எண்ணலற்றுக்   குடித்தேன் மதுவை.
 இன்று,
 அதிகமாய் நேசிக்கத் தேடியது
 நினைக்க வைத்தது
 நம் உரையாடலின் நேரம்
 நீள விரும்பி
 நெருக்கமாய் அணைக்கத் தோன்ற
 மனிதர் மீதான காதல்
 மதுவினால் ஊறும்.
  போதை எனை வாதைகள் செய்யும்
 உடலும் மனசும்
 அதைத்துப்பிடச் சொல்ல
 மருகும்
 கண்கள் சுழல
 தழும்பும் விழிநீரை விழுங்கி
 தீர்த்திடும் போதை தந்த வாதைகளை.

 எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
 நானுணர்வேன்

நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவலும்
நானறிவேன்.

ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்.

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடித்து
வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மேசை நிறைத்து ஊற்றி மதுவை
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துகளுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

அப்பொழுது

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
 நானுணர்வேன்

நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவலும்
நானறிவேன்.

 ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்.

3 thoughts on “அகமும் புறமும்

  1. உண்மை தான் எது நடந்துகொண்டிருந்தாலும் நாம் வாழும் வாழ்க்கையை இழப்பதில்லை.இவ்வளவு காலங்களாக உலகில் எண்ணிலங்காத சாவுகள் கொடுமைகள் நாளாந்தம் நடைபெறும் போது சாதாரணமாகத் தான் இருந்தோம்.மற்ற நாட்டவரின் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கவில்லை.அது பற்றித் தெரியாமல் வாழ்ந்தோம்.ஆனால் நெருக்கமானவர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் என்றபோது தான் பாதிப்புகள் விளங்கும்.ஒரு வகையில் சொந்த இனத்துக்கான புலம்பலைச் செய்கிறோம்.பொதுவில் மனிதாபிமானமுள்ளவர்களாக இனிமேலாவது மற்ற இனத்தவர் பிரச்சனைகளையும் இனியாவது உணர்வோமா?

  2. வதை மறுப்பு,
    இறுகிய மனம்பிடித்த இளக்காரமே
    கசப்புகளை நெருக்கி
    நெஞ்சில் கடையும் உன் நெருக்கம் வேண்டாம்.
    என் பசப்பல் என்னோடு.
    ஒரு குரல்.
    ஒரு சிணுங்கல்.
    கரைதல் வேண்டாம்.
    பசைவற்றி ஒட்டுறவாடல்
    என் பசப்பலோடு இறுகி சாகட்டும்.
    கனக்க நினைவு தோய்ந்தபடி
    என்னோக்கி காறித்துப்பிய நீர்
    கொஞ்சும் குரலில் கூவி
    வதக்கி முறுகியுடைந்த முதுகு- முறுக்குடன் இருக்கு இன்னும்.
    சாவுக்கு மணி அடித்து மறுப்புகள் செய்தென்ன
    பல் நிறம்மாற்றி நாக்கிற் படரும்
    சிவத்த வைனையும் எதிர்த்து
    மூளையின் அணுக்கள்
    தர்க்கமாக அறிவிக்கும்
    உணர்வுகளை எதிர்த்து உதைக்க
    ஒரு போத்தல் போதாது.
    மற்றப் போத்தலை உடைத்துவிட்டு
    மிகுதியை எழுதுவேன்…

    – ஸ்யாமெயின்-

  3. வதை மறுப்பு,

    இறுகிய மனம்பிடித்த இளக்காரமே
    கசப்புகளை நெருக்கி
    நெஞ்சில் கடையும் உன் நெருக்கம் வேண்டாம்.
    என் பசப்பல் என்னோடு.
    ஒரு குரல்.
    ஒரு சிணுங்கல்.
    கரைதல் வேண்டாம்.
    பசைவற்றி ஒட்டுறவாடல்
    என் பசப்பலோடு இறுகி சாகட்டும்.
    கனக்க நினைவு தோய்ந்தபடி
    என்னோக்கி காறித்துப்பிய நீர்
    கொஞ்சும் குரலில் கூவி
    வதக்கி முறுகியுடைந்த முதுகு- முறுக்குடன் இருக்கு இன்னும்.
    சாவுக்கு மணி அடித்து மறுப்புகள் செய்தென்ன
    பல் நிறம்மாற்றி நாக்கிற் படரும்
    சிவத்த வைனையும் எதிர்த்து
    மூளையின் அணுக்கள்
    தர்க்கமாக அறிவிக்கும்
    உணர்வுகளை எதிர்த்து உதைக்க
    ஒரு போத்தல் போதாது.
    மற்றப் போத்தலை உடைத்துவிட்டு
    மிகுதியை எழுதுவேன்…

    – ஸ்யாமெயின்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s