தர்மினி

குளிர்ச்சியான மாலைப்பொழுதொன்று
ஆரம்பிக்கும் அறிகுறி.
வெற்று வானத்தில்
சாம்பல் முகில்கள் ஓடியும் கூடியும்
 உலவிக் குலவின.

காற்று மரங்களைச் சிலுப்பி வீச
வெக்கை தணிந்து
மெதுவாகத் துளிகள் வீழ்ந்து
வேகமெடுத்துப் பெய்தது.

சன்னற் திரை விலக்கி
‘அந்திமழை பொழிகிறது’ “முணுமுணுத்து
அதை இரசித்தாள்.
மகனடித்த பந்து முதுகிற் பட்டுத் திடுக்கிட்டு
“ஓடிவா ஓடிவா மழை பெய்யுது மகனே”
சன்னற் கண்ணாடியால் பார்த்தவன்
சற்றும் பிந்தாமல் கேட்டான்
“எல்லோரும்  வேலைமுடித்துக் குடைபிடித்து
 வீடு போக,
 என் அப்பா இன்னும் ஏன் வரவில்லை?”
…………………………………………………………
துமிகளைத் தூவி முடித்தது மழை.

Advertisements