தர்மினி

அவனிடம்
ஒரேயொரு முத்தந் தரக் கேட்டபோது-அது
 அவளைச் சிலிர்க்க வைக்கும் வசனமாயிருந்தது.

தவித்துப் புரளும் அலைகளை
உதடுகள் உணர வைத்தது.

விரிந்து சென்ற கனவுகள் ஊடாக
கவிதைகளை எழுதித்தந்தது.

‘ஒரேயொரு முத்தமென்ற’வாக்கியத்தை
உலக அன்புப் பிரதி என்று மொழிந்தாள்.

காத்துக்களைத்து
மெதுமெதுவாக எழுத்துக்களாக
உதிர்ந்தது வசனம்.

முடிவிலது
வெறுமையை ஒரு நாள் விட்டுச் செல்கையிலே
அதுவொரு
குறுங்கவிதையாகவோ
சிறுகனவாகவோ போகட்டுமே என்றான்.

அவளுடலோ முத்தக் காடாய்க் கிடந்தது.

Advertisements