எழுதியவர்: ஜான்பெர்கின்ஸ்
தமிழில்: இரா.முருகவேள்    

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

முன்னுரையிலிருந்து சில வரிகள்……….
nsa-usa    நான் இப்புத்தகத்தை எழுதுவதை நிறுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன்.அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் நான்கு முறை இதை மீண்டும் தொடங்க முயன்றேன்.1989-இல் பனாமா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முதல் வளைகுடாப்போர், சோமாலியா, ஒசாமா பின்லேடனின் எழுச்சி போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் புத்தகத்தைத் திரும்பவும் தொடங்கத் தீர்மானிப்பேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் மிரட்டல்கள் அல்லது கையூட்டுகள் என்னை இடையிலேயே கைவிடும்படி செய்தன…..
       நான் செய்ய வேண்டியது என்ன என்பதை விவரித்த போது கிளெடின் ஒளிவு மறைவு எதையும் வைத்துக் கொள்ளவில்லை.’அமெரிக்க வணிக நலன்களை முன்னிறுத்தும் விரிந்த வலைப்பின்னலின் பகுதியாக மாறுவதற்கு உலகத் தலைவர்களைத் தூண்டுவது.முதலில் இந்தத் தலைவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள்.அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.பின்பு நமது அரசியல் பொருளாதார இராணுவ தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு மாற்றாக அவர்கள் தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள் மின்சக்தி நிலையங்கள் விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வார்கள்.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொறியியல் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவார்கள்” என்று அவள் சொன்னாள்.
       இந்த அமைப்பு மூர்க்க வெறி கொண்டு ஓடியதன் விளைவுகளை இன்று நாம் பார்க்கிறோம்.மனிதத் தன்மையற்ற சூழல் நிலவுகின்ற மனிதர்களைக் கசக்கிப் பிழிகின்ற ஆசியத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நமது மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத் தரப்பட்டது போன்ற கூலியையே தந்து வருகிறார்கள்.எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே விஷப் பொருட்களை மழைக்காடுகளினூடே ஓடும் ஆறுகளுக்குள் கொட்டுகின்றன.அவை திட்டமிட்டே விலங்குகளையும் தாவரங்களையும் அழிப்பதோடு பழம் பண்பாடுகளைப் பின்பற்றும் மக்களையும் கூட்டங்கூட்டமாகக் கொன்று குவிக்கின்றன.மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எச்.ஐ.வி.யால்பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளிக்க மறுக்கின்றன…..
      இப்படியிருக்கும் போது தீவிரவாதிகள் ஏன் நம்மைத் தாக்குகிறார்கள் என்று நாம் அப்பாவித்தனமாக ஆச்சரியப்படுகிறோம்………….

முதலாம் பாகம்:அத்தியாயம் 2இல் சில வசனங்கள்

‘நீ ஒருவன் மட்டுமே பொருளாதார அடியாள் அல்ல. நம் தொழில் மட்டமானது தான்.ஆனால் நாம் ஒரு அரிய வகையைச் சேர்ந்தவாகள்……………அதன் பின்பு பொருளாதார  அடியாள் என்ற முழுப்பெயரையும் எப்போதாவது தான் பயன்படுத்தினாள்………..
        இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நான் செயலாற்ற வேண்டும்.முதலாவது நாடுகளுக்கு மிகப் பெரிய அளவிற்குக் கடன் வழங்கி அந்தப்பணத்தைப் பெரும் கட்டுமானத் திட்டங்கள் மூலம் ,பெக்டெல் ,ஹாலிபர்ட்டன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றித் திரும்பவும் அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும்.
இரண்டாவது கடன் வாங்கிய நாடுகளைப் போண்டியாக்குவதற்கு நான் வேலை செய்ய வேண்டும்.(அதாவது மெய்னுக்கும் மற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்த பிறகு தான்)அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால் தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கும்.நமக்கு இராணுவத்தளங்களோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ ஐ.நா. சபையில் ஓட்டுகளோ தேவைப்படும் போது இந்தக் கடன் வலையில் விழுந்துவிட்ட நாடுகளால் மறுக்க முடியாது.

  பாகம் நான்கிலிருந்து சில வரிகள்…..
        மேற்பார்வைக்குத் தெரியக் கூடிய விஷயங்களை விட வேறு காரணங்களுக்காக  ஈராக் நமக்கு முக்கியமானது.ஈராக்கிலுள்ள  எண்ணெய்க்காகவே அது முக்கியமானதாகக்கருதப்படுகிறதுஎன்ற கருத்து பொது மக்களிடையே நிலவி வந்தாலும் அது மட்டும் காரணமல்ல.ஈராக்கிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்குக் காரணம் அதிலுள்ள நீர்வளமும் அதன் புவியியல் அமைப்புமேயாகும்.யூப்பிரட்டீஸ், டைக்ரீஸ் ஆறுகள் இரண்டும் ஈராக் வழியாகப் பாய்கின்றன.எனவே இப்பகுதியிலுள்ள வேறெந்த நாட்டையும் விட ஈராக்கே மிக அதிகமான நீர்வளத்தைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டுள்ளது.1980களில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தண்ணீருக்கு உள்ள முக்கியத்துவம் ஆற்றல்வளம் மற்றும் பொறியியல் துறைகளில் இருந்த எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.தனியார்மயமாக்கலை நோக்கிய பாய்ச்சலில் பெரும் நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்குவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.அவை ஆபிரிக்கா லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்தியகிழக்கிலுள்ள நீராதாரங்களைத் தனியார்மயமாக்குவதற்காகவும் முனைந்து நிற்கின்றன.
     அது அமைந்துள்ள பகுதியும் மிகவும் கேந்திர முக்கியத்துவமுடையதாகும்.அது ஈரான், குவைத், சவுதிஅரேபியா, ஜோர்டான் ,     சிரியா மற்றும் துருக்கியைத் தனது எல்லைப் புற நாடுகளாகக் கொண்டுள்ளது………………
        இன்று ஈராக்கை யார் கட்டுப்படுத்தகிறாhகளோ அவர்களிடம் தான் மத்தியகிழக்கைக் கட்டுப்படுத்தவதற்கான சாவி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்……………………..
     சர்வதேசச் சட்டத்தை சதாம் மீறி விட்டதாகக் குற்றம் சாட்டி புஷ் பதிலடி கொடுத்தார்.ஆனால் இதே புஷ் சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் பனாமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்……………..
           ஈராக்கிலும் கொலம்பியாவிலும் பனாமாவிலும் ஈரானிலும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதும் கற்பழிக்கப்படுவதும் நியாயப்படுத்தப் படுகிறது.பொருளாதார அடியாட்களும் குள்ளநரிகளும் இராணுவங்களும் தாங்கள் சித்திரவதை செய்து வரும் மக்களின் நன்மைக்காகத் தான் அவர்களது பொருளாதார வளாச்சிக்கு உதவுவதற்காகத் தான் இக்கொடுமைகளையெல்லாம் செய்கிறாhகள் என்று கூறப்படுகிறது…….நீங்கள் ஒரு நகரத்தைக் குண்டு வீசி அழித்துவிட்டு பின்பு அதைத் திரும்பவும் கட்டினால் புள்ளிவிபரங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதாகத் தான் காட்டும்.
முடிவுரையில்…… ஆலோசனைகள் கூறுகிறேன் என்கிறார் ஆசிரியர் அவை கீழே:
1. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற இந்நூல் குறித்து வாசகர் கூட்டங்கள் புத்தகக்கடைகளிலோ     நூலகங்களிலோ நடத்துங்கள்.(இதற்கான குறிப்புகள்  www.johnperkins.org    என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.)
2. உங்களுக்குப் பிடித்தமான துறை தொடர்பாக ஓர் உரையை அருகில் உள்ள சிறுவர் பள்ளியில் நிகழ்த்தத் தயார் செய்யுங்கள்.(சமையல், விளையாட்டு, எறும்புகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் அந்த உரை இருக்கலாம்.)இந்த உரையை மாணவர்களுக்குச் சமூகம் குறித்த விழிப்புணர்வை அளிக்கப்பயன்படுத்துங்கள்.
3. இந்த நூலும் இதைப் போன்ற மற்ற நூல்களும் உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உங்களுக்கு வேண்டியவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புங்கள்.

ஆசிரியர் முடிவுரையில் தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார்.

“எப்படி இருந்தாலும் இந்தப்புத்தகம் ஒரு மருந்துச்சீட்டு அல்ல.இது ஒரு எளிய ஒப்புதல் வாக்குமூலம்.
இப்போது உங்கள் முறை. நீங்கள் உங்கள் சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க வேண்டியுள்ளது.நீங்கள் யார் என்பதைப்பற்றியும் இந்தக் கால கட்டத்தில்நீங்கள் ஏன் இப்போதுள்ள இடத்திலிருக்கிறீர்கள் என்பது பற்றியும் நீங்கள் கர்வமடையக் கூடிய அல்லதுவெட்கமடையக் கூடியசெயல்களை ஏன் செய்தீர்கள் என்பது பற்றியும் அடுத்த எங்கே போக விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்து கொண்டால் ஒரு விடுதலை உணர்வை அடைவீர்கள்.”

விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு டிசம்பர் 2008(முதற்பதிப்பு டிசம்பர்2006)

விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர்,
மசக்காளிபாளையம்(வடக்கு)
கோயம்புத்தூர்-641015

தொலைபேசி: 00914222576772

விலை ரூ.150/-

 

Advertisements