இரு கவிதைகள்

மோனிகா

பிரிவாற்றாமை

தோ என் பிரிவாற்றாமைக் கவிதையில்

வந்தவர் வருத்தம் தீர்ந்து மறையும் flowers

இலவச மருத்துவமனையின் இரவுக்காவலாளிபோல்

இலவைக் காத்திருக்கிறதோர் கிளி.

கடற்கரை மணற்பதிவில் ஒரு ஜதை பாதங்களுக்குப் பதில்

ஒற்றைப்பாதத்தை காண்கிறாள் கவிதாயினி.

திக்குத்தெரியாத பயணங்கள் யாவிலும்

அர்த்தம் பொதிந்ததாய் நடிக்கின்றன

நகரங்கள் குளிக்கும் சோடியம் விளக்குகள்.

தோ என் பிரிவாற்றாமைக் கவிதையில்

இரயிலில் இடையறாமல் கொடுத்த முத்தங்கள் யாவும்

இரக்கும் ஒரு இரவுப் பாடகனின் இசையில் கரைந்து காணாமல் போகின்றன.

தோ என் பிரிவாற்றாமைக் கவிதையை

நான் எழுதிக் கொண்டிருக்கும் அதே நேரம்

என்னை நோக்கி நீள்கிறது மற்றுமொரு

காதல் கடிதம்.

தனிமையின் மொழி நிழல்

இரவு விளக்கின் நிழலுக்குள் பதுங்கி

இருக்கிறது தனிமை பூதம்.

நிலாமுற்றத்தில் அசைந்தாடும் செடியின் நிழலைப்போல

சிலாகிப்பைத் தருவதில்லை அது.

பொருள்மீள்ந்த கனங்களின் மொழியை

உண்டு கருத்த நிழல் அது.

எதுவும் கூற வாயெடுக்கும் என்னை

தட்டியமர்த்தும் ஆழம் அதனுள்.

நடுநிசியிலென் நாடித்துடிப்பை நடித்துக் காட்டும்

கடிகாரச் சத்தமும் உறுத்தும்

இந்நிழல் வழங்கும் நிச்சலத்தில்.

தூரத்து ஊர்த்தியோ துணைக்கழைக்கும் ஒலித்தட்டோ

அதுவும் இதுவுமாய் எல்லாமிருந்தும்

தனித்திருக்கத் தலைப்பட…வில்லை.

தனியே இருக்கிறேன்.

தலை முன் நிழல்.

Advertisements