தர்மினி

 உரையாடலின் வெற்றிடம்
 தண்ணீருக்கான விடாயாய்
 தாகத்தின் வெம்மையாய்
 வறள வைத்தது.

கள்ளிகளைக் கடித்த ஒட்டகங்கள்
முட்கள் குத்திய புண்களை
நக்கிச் சுவைக்கின்றன.

 மண்ணிற் கீறிய ஓவியம்
 புயலிற் கிழிந்தே போனது.

துடைத்து விட்ட பாலையில்
இரட்டைப் பாதங்கள்
அடிகள் அழிபடப் போயின.

அவன் வார்த்தைகளுக்கான தவிப்பில்
தீர்க்க முடியாமல்
என்  தகிப்பு.

இரண்டு ஒட்டகங்களைத் தின்று
தாகந் தணிக்க முயன்று
கால்கள் மட்டும் வளர்ந்த போதில் அலைய,

பாலைவனத்தில் விக்கிச் சாகும் ஒருத்தி
 என் கன்னங்களில்
 அறைந்தாள்.

 

Advertisements