தாகமாயிருக்கிறது

தர்மினி

 உரையாடலின் வெற்றிடம்
 தண்ணீருக்கான விடாயாய்
 தாகத்தின் வெம்மையாய்
 வறள வைத்தது.

கள்ளிகளைக் கடித்த ஒட்டகங்கள்
முட்கள் குத்திய புண்களை
நக்கிச் சுவைக்கின்றன.

 மண்ணிற் கீறிய ஓவியம்
 புயலிற் கிழிந்தே போனது.

துடைத்து விட்ட பாலையில்
இரட்டைப் பாதங்கள்
அடிகள் அழிபடப் போயின.

அவன் வார்த்தைகளுக்கான தவிப்பில்
தீர்க்க முடியாமல்
என்  தகிப்பு.

இரண்டு ஒட்டகங்களைத் தின்று
தாகந் தணிக்க முயன்று
கால்கள் மட்டும் வளர்ந்த போதில் அலைய,

பாலைவனத்தில் விக்கிச் சாகும் ஒருத்தி
 என் கன்னங்களில்
 அறைந்தாள்.

 

5 thoughts on “தாகமாயிருக்கிறது

  1. கள்ளிகளைக் கடித்த ஒட்டகங்கள்
    முட்கள் குத்திய புண்களை
    நக்கிச் சுவைக்கின்றன

    நல்ல வரிகள்.. ஆனால் ஏற்கனவே இதை எங்கோ படித்த நியாபகம் வருகிறது தோழி. வேறெதிலாவது வெளியாகி இருக்கிறதா?

    மண்ணிற் கீறிய ஓவியம்
    புயலில் கிழிந்தே போனது

    ம்ம் அபாரம் வாழ்த்துக்கள்.. தர்மினி

  2. தோழர்
    கள்ளிகளைக் கடித்த ஒட்டகங்கள்…..எனத் தொடரும் வாக்கியங்களை நான் எங்கும் படித்த ஞாபகமில்லை.இக்கவிதையும் தூமையில் முதன்முதலில் வெளியாகியுள்ளது.ஆனால் இக்குறியீடு எங்காவது வாசித்த தாக்கம் இருந்து என் கவிதையில் நுழைந்திருக்கலாம்.
    உங்கள் இரசனையும் பாராட்டும் உற்சாகத்தைத் தருகின்றன.
    நன்றி
    தர்மினி

  3. மன்னிக்கவும் தோழி குறியீட்டை தான் நானும் குறிப்பிட்டேன்..
    உங்கள் கவிதை தனித்து அடையாளம் சொல்லக்கூடிய மொழியின் தடத்தில் பயணிக்கிறது.. வீரியமும் செறிவும் வியக்கவைக்கிறது.. வளமாய் தொடர வாழ்த்துக்கள்..

  4. வணக்கம் தோழி. வல்லினத்தில் வெளியாகி இருந்த “வெற்றுச்துரம்_கனவுகளுடன் கடப்பவள், நிர்வாணங்கள்
    ஆகிய மூன்று கவிதைகளுமே நன்றாக இருந்தது..
    வாழ்த்துக்கள்..

  5. தோழர்,
    மன்னிக்க ஒன்றுமில்லையே. நீங்கள் சுட்டிக்காட்டியதை நான் தவறாக நினைக்கவில்லை.
    நன்றி
    தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s