தர்மினி

எப்போதும்
வெறுங் காற்றில்
இறகு விரித்துப் பறந்து திரிந்து
சிறகுகள் உதிர்ந்து
அலைக்கழிந்த பறவையாய்
தாகத்துடன் தரையிறங்குகையில்
பருகத் தேடும்
நீராய்ப் பாசம்.
 
நில்லாமல் வட்டமடிக்கும்
என் நிழலறியாமல்
செட்டைகள் கழரும் சாக்களைப்பில்
நிலம் பாவி நான் நடக்கையில் நீ நினைப்பாய்
இடையிடையே  இறகு விரிப்பதாய்.

உனது பொழுதுகள் உனக்கானவை.
 எனது பொழுதுகளும் எனக்கானவை.
 நமது பொழுதுகள் எங்கேயென்று தேடுவார் யார்?
 தானாகத் தேய்ந்து கொண்டேயிருக்கிறது
நேரம்
விநாடிகள் ஒவ்வொன்றும்
பூமியைத் துரத்திச் செல்ல
கணிப்பீடுகளிற் கட்டுண்டிருப்போம்.

Advertisements