மோனிகா

மழைமறந்த பாறைகளின் முகடொன்றில்

இன்னும் ஒரு விடியலை நோக்கி காத்திருப்போம் நாம்.

தேநீர் கோப்பைகளுக்கு நடுவே

வேர்களுடன் இடம்பெயர்ந்தலையும் நம் கையில்

மீண்டும் கிடைக்கும் ஒரு துண்டு வானம்.

கோலியாத்துகள் பூமியைத் தூளாக்கி

புசித்துக் கொண்டிருக்கையில்,

சாத்தானின் தூதர்கள் எளியோரின் சதையைச்

சிதைத்து எக்காளமிடுகையில்

நிதமும் நாம் வெள்ளக்காட்டில் மிதந்து போகும்

ஒரு பெயரிலி இலைபோல

காத்திருப்பை மட்டுமே

கலகமாய்க்கொண்டு,

விடியல், தேநீர்க் கோப்பை,

வெள்ளக்காடென்று சொல்லிக்கொண்டு…

Advertisements