மோனிகா
பறக்கும் பட்டம் ஒன்று
இறக்கை நூலாகிப் பிரிய
கிடக்கும் என் ஜன்னலின் ஒரத்தில்.
வானத்தை தன் கோடுகளால் பிரிக்கும்
மின்கம்பி தன் கரம் நீட்டி
அழைப்பதுண்டு,
வேலையற்றமரும் காக்கைகளை,
விட்டவுடன் காதலில் திளைக்கும்
கிளிக்கூட்டங்களையென பலவற்றை.
சில நேரம் கூட்டங்களில் வந்தமரும்
பறவைகள் ஏதோ அந்த மாலைக்கான
பாடலின் வரிகளைப்போல
பாசாங்கு செய்வதுமுண்டு.
இன்றந்தக் கம்பிகளோ பட்டம் தரித்து
ஒரு எட்டாச் சிறுவனின் இச்சைக்குரியதாய்
ஏனோ இன்னும் இறங்க மறுப்பதாய்..
இன்றெனக்கு வாய்த்தது
இப்படி ஒரு சாளரம்..

Advertisements