இன்றைய சாளரம்

மோனிகா
பறக்கும் பட்டம் ஒன்று
இறக்கை நூலாகிப் பிரிய
கிடக்கும் என் ஜன்னலின் ஒரத்தில்.
வானத்தை தன் கோடுகளால் பிரிக்கும்
மின்கம்பி தன் கரம் நீட்டி
அழைப்பதுண்டு,
வேலையற்றமரும் காக்கைகளை,
விட்டவுடன் காதலில் திளைக்கும்
கிளிக்கூட்டங்களையென பலவற்றை.
சில நேரம் கூட்டங்களில் வந்தமரும்
பறவைகள் ஏதோ அந்த மாலைக்கான
பாடலின் வரிகளைப்போல
பாசாங்கு செய்வதுமுண்டு.
இன்றந்தக் கம்பிகளோ பட்டம் தரித்து
ஒரு எட்டாச் சிறுவனின் இச்சைக்குரியதாய்
ஏனோ இன்னும் இறங்க மறுப்பதாய்..
இன்றெனக்கு வாய்த்தது
இப்படி ஒரு சாளரம்..

3 thoughts on “இன்றைய சாளரம்

  1. அற்புதமான கவிதை. புலம்பெயர் நாட்டில் முதுமையை கழித்தாலும், பிறந்த நாட்டில் கழித்த இளமையை மன கண்ணில் மீட்கிறது இக் கவிதை

  2. கவிதை எல்லோருக்கும் புரிவதில்லை; அல்லது நாம் எழுதிய வண்ணம் புரிந்துவிடுவதில்லை. புரிந்து கொள்ளும் பொருமையையை காலம் எடுத்துக் கொண்டு அதோ கடந்துக் கொண்டே இருக்கிறது. அந்த காலத்தின் உடம்பில் நாம் வாழ்ந்த அடையாளத்தை; நாம் பார்த்த காட்சிகளை; நம் உணர்ந்த உணர்வுகளின் ஏதேனும் ஒரு காரணியை எழுத்தாக பதித்து வைக்கும் முயற்சி – கவிதை.

    அந்த கவிதையில் நாம் பார்த்த காட்சி நீள்கிறது. காட்சி வாசிப்பவருக்குள் பரவி கவிதையை ருசிக்க வைக்கிறது. ருசியில் தான் வித்தியாசப் பட்டுப் போகிறோம் எழுதிக் கொண்டிருக்கும் நாம், தவிர; எத்தனை சிரமப் பட்டு ஒவ்வொரு கவிதையும் புனையப் படுகிறது என்பதை பற்றிய கவலை இன்றைய போக்கில் நிறைய பெருக்கில்லை.

    போகட்டும், மின்கம்பியில் தொங்கும் ஒரு அறுந்து போன பட்டத்திற்கான பதிவாய்.. நீங்கள் எழுதிய இக்கவிதை வெறும் அருமை என சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக விரும்பாமலே சற்று கூடுதல் லயித்துவிட்டேன் தங்களின் எழுத்தாற்றலில்!

    பாராட்டுக்கள்..

    வித்யாசாகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s