–    மோனிகா

‘ஏனிந்த கடிகாரத்தில் பன்னிரண்டே எண்கள்’

என்றேன் ஒரு குழந்தையிடம்.

‘அது தெரியாதா? அங்கு

அதற்குமேல் இடமில்லை!”

என்றது அது.

“கரடி வரையத் தெரியுமா?” என்றேன்.

‘அது மிகவும் எளிது. எந்த விலங்கை

வரையப் போகிறோம் என்று தீர்மானிக்காமல்

தொடங்குவது நன்று”

என்றது அது.

அது ஏனோ குழந்தைகளுக்கு மட்டும்

எல்லாமே தெரிந்திருக்கிறது.

Advertisements