-மோனிகா

வாசிப்பின் தெளிவில்

பொருள் பிடிபடவில்லையெனினும்

அடையாளப்படுத்திக் கொள்வன

எழுத்துருக்கள்.

காலையும் மாலையும் கற்றலும் கடமையும்போல்

எல்லாமும் நிர்ணயிக்கப்படுவது

எனதல்லா சமூகத்தால்.

எனதாகிய ”நானை” தேடவும்

ஏராளம் வழிவகைகள்.

தூரெடுக்கச் சுரக்கும் கேணிபோல்

தேகக் காட்டில் தேடக்கிடைக்கும்

நீட்சியும், மீட்சியும்.

எழுத்துருபோலவே உடற்கணிதத்தில்

சிறப்புறும் அவயம் சொல்லியவாறே.

மனமாச்சரியங்களை உடைத்தெரிய

மகுடிக்கு மசியாத பாம்புபோல

உடலாட்படுவதையும் உதறிவிடலாம்.

வேட்கை, வதை, வேர்நோக்கித் தழுவல்

இவையாவும் வாடிக்கையான பின்னே,

வேண்டுமொரு மறுவாசிப்பு

என் உடலை நோக்கி.

ஓவியம்: சால்வடார் டாலி

Advertisements