மறுவாசிப்பு

-மோனிகா

வாசிப்பின் தெளிவில்

பொருள் பிடிபடவில்லையெனினும்

அடையாளப்படுத்திக் கொள்வன

எழுத்துருக்கள்.

காலையும் மாலையும் கற்றலும் கடமையும்போல்

எல்லாமும் நிர்ணயிக்கப்படுவது

எனதல்லா சமூகத்தால்.

எனதாகிய ”நானை” தேடவும்

ஏராளம் வழிவகைகள்.

தூரெடுக்கச் சுரக்கும் கேணிபோல்

தேகக் காட்டில் தேடக்கிடைக்கும்

நீட்சியும், மீட்சியும்.

எழுத்துருபோலவே உடற்கணிதத்தில்

சிறப்புறும் அவயம் சொல்லியவாறே.

மனமாச்சரியங்களை உடைத்தெரிய

மகுடிக்கு மசியாத பாம்புபோல

உடலாட்படுவதையும் உதறிவிடலாம்.

வேட்கை, வதை, வேர்நோக்கித் தழுவல்

இவையாவும் வாடிக்கையான பின்னே,

வேண்டுமொரு மறுவாசிப்பு

என் உடலை நோக்கி.

ஓவியம்: சால்வடார் டாலி

7 thoughts on “மறுவாசிப்பு

 1. இராகமும் தாளமும் போல் இந்த வாசிப்பின் அடிப்படைதான் பிரபஞ்ச இயக்கத்தின் கருவூலம். இதை கொச்சைப் படுத்தாமலும் உருக்குலையாமலும் வாசித்தால் எத்தனை மறு வாசிப்பு தேவைப்பட்டாலும் சலிக்காது.

  1. தமிழன் அவர்களே,
   உங்கள் இடுகைக்கு நன்றி. கொச்சைப்படுத்துவது, காமம், புனிதப்படுத்துவது முதற்கொண்டு எல்லாமே வழமையான நடைமுறைகள். உடலைப் பற்றியும், அதன் இயக்கம், புரிதல் ஆகியவற்றைப் பற்றியும் ஏற்படுத்தியுள்ள கற்பிதங்கள்தானே அவை. இவற்றைத் தாண்டி நமது இருப்பிடத்தை நமது வாழ்தலுக்கும் தேவைக்கும் ஏற்றார்போல் மாற்றியமைப்பதுபோல், நமது உடலை நோக்கி நாமாகவே சிந்திக்க அதுவே ஒரு மறுவாசிப்பாக முடியுமெனக் கருதுகிறேன்.

 2. மகாகவி ஒரு யோகி என்பது உலகறிந்த விடயம் எனினும் உள்ளம் பூரிக்கிறது அவனின் யூகம் கண்டு மோனிகா. காரணம் இப்படிப் பட்ட கவிஞர்களை எல்லாம் இன்று தமிழுலகத்திற்க்கு தரவேண்டி தான் அன்றே பெண்களை புதுமையுறச் சொன்னான் போல் பாரதி. தூமை உமா என மிக நல்ல படைப்பாளிகளால் இப்படி நல்ல வலைபூக்கள் தமிழுக்கான பலம். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். மிக நல்ல கவிதை இது. மிக்க வாழ்த்துக்கள்!

  வித்யாசாகர்!

 3. மோனிகா, உங்கள் வரிகள் அற்புதம். அதே நேரம் ஒரு சந்தேகம்.தேகக் காட்டினை கடத்தல் சுலபம் என்கிறீர்களா? அதை விடுத்து எங்கே போவது.

 4. அன்பு நிர்மலா,
  தேகம் கடப்பதென்று தொன்று தொட்டு வரும் சாத்தியங்கள் பற்றி கூறவில்லை. மாறாக இதுவரை தேகம், அங்க அவயங்கள், சுகம், சுகமல்லாதவை குறித்து நமக்கு போதிக்கப்பட்டவற்றை மறுவாசிப்பு செய்தல் மூலம் உடலைப் பற்றி வேறு விதமாக சிந்திக்க முடியுமா என்ற சாத்தியத்தை நோக்கியே கேள்வியெழுப்புகிறேன். தொடர்ந்து விவாதியுங்கள். நன்றி – மோனிகா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s