– மோனிகா

உடலைத் தவிர்த்தென்ன உண்மை

வேண்டும் உங்களுக்கு..

அண்ணா சாலையின் ஆடை விளம்பர

அழகியின் உடலும்,

தேவியின் திரையில் தீண்டத் துடிக்கும்

திரைப்பட உடலும்,

தின்றுத் தொலைக்கும் வறுகடலை

காகிதம் வரிக்கும் அந்த கவர்ச்சிப்

படமும் என்னுடலல்ல

என் இனப் பெண் உடலுமல்ல

உரக்கக் கூறினால்..

அது வர்த்தகம், உலகமயம், குடும்பம்,

கலாச்சாரமென சங்கம் முதல்

தன் அங்கம் காட்டி மார்பு மதர்த்த

ஆண்மையின் உடல்.

அவனவன் நோக்க உண்மை தெரியும்

உம் அகக் கண்ணாடியில்.

கவிதையில் எழுதக் கற்பென்னவாகும்?

கழுதை.. இருந்தால் கதறும்..

இருபாலும் வேண்டுமென்று..

(2005 ல் எழுதியது)

ஓவியம்: சால்வடார் டாலி

Advertisements