உடலைத் தவிர்த்து

– மோனிகா

உடலைத் தவிர்த்தென்ன உண்மை

வேண்டும் உங்களுக்கு..

அண்ணா சாலையின் ஆடை விளம்பர

அழகியின் உடலும்,

தேவியின் திரையில் தீண்டத் துடிக்கும்

திரைப்பட உடலும்,

தின்றுத் தொலைக்கும் வறுகடலை

காகிதம் வரிக்கும் அந்த கவர்ச்சிப்

படமும் என்னுடலல்ல

என் இனப் பெண் உடலுமல்ல

உரக்கக் கூறினால்..

அது வர்த்தகம், உலகமயம், குடும்பம்,

கலாச்சாரமென சங்கம் முதல்

தன் அங்கம் காட்டி மார்பு மதர்த்த

ஆண்மையின் உடல்.

அவனவன் நோக்க உண்மை தெரியும்

உம் அகக் கண்ணாடியில்.

கவிதையில் எழுதக் கற்பென்னவாகும்?

கழுதை.. இருந்தால் கதறும்..

இருபாலும் வேண்டுமென்று..

(2005 ல் எழுதியது)

ஓவியம்: சால்வடார் டாலி

One thought on “உடலைத் தவிர்த்து

  1. ஆண்களை போல் பெண்களும் பல வகை… நீங்கள் ஆபாசம் என்பதை அவர்கள் விரும்பி செய்கிறார்கள்…அவர்களிடம் போய் ஆணாதிக்கம் பற்றி பேசுங்கள்… நம்மை பார்த்து நகையாடுவார்கள்…

    கவிதை மிக மிக நன்று….

    //அது வர்த்தகம், உலகமயம், குடும்பம்,
    கலாச்சாரமென சங்கம் முதல்
    தன் அங்கம் காட்டி மார்பு மதர்த்த

    ஆண்மையின் உடல். //

    அழுத்தமான வரிகள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s