ஊடகங்களில் பெண்கள்

5 thoughts on “ஊடகங்களில் பெண்கள்

 1. நிதர்சனமான உண்மைகள்…. ஒரு மிக பெரிய சமுதாய புரட்சி நிகழாத வரை எதுவும் மாற போவதில்லை.

  இந்த உலகில் குறிப்பாக இந்தியாவில்…இந்த கருத்து ஒரு சதவிகிதமாவது போய் சேருமா…
  படித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் அதே நேரம் மாற்று கருத்தை அனுமதிக்க தைரியம் வேண்டும்…

 2. மோனிகா
  அண்மையில் வினவு வலைத்தளத்தில் தமிழச்சியினால் இடப்பட்ட பின்னூட்டத்தில் சம்பந்தமேயின்றித் தங்களைக் குறித்தும் எழுதியிருந்தார்.அது அவர்களால்(வினவு) எழுதப்பட்ட கட்டுரையைத் தாண்டிக் காழ்ப்பைக் வாந்தியெடுத்திருந்தது.ஆனாலும் அதனூடாக உங்கள் அருமையான பேட்டியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.என்னைப் போன்ற பலருக்கும் இந்தத் தற்செயல் நடந்திருக்க வாய்ப்புண்டு.இவற்றையெல்லாம் படித்த பின் ஐயனாரின் பதிவும் படித்த போது அதை உங்களுடன் பகிரத் தோன்றுகிறது. நன்றி ஐயனாருக்கு.
  கீழே ‘தனிமையின் இசை’யில் எழுதப்பட்ட தமிழச்சி பற்றிய தகவல்கள் படிக்க.

  தமிழச்சிக்கான எதிர்வினைகள் எத்தனை அவசியம்?என்றெல்லாம் யோசித்துப் பார்த்து எழுதும் மனநிலையில் இல்லை. இருப்பினும் மேம்போக்கான வறட்டுக்கூச்சலுக்கு, விளம்பர மோகத்திற்கு, மூலத்தை சிதைக்கும் அபத்தங்களுக்கான எதிர்வினைகளை வைத்தேயாகிவிடுவது என்ற நிலைக்குத் தள்ளியது என் உள்வெளி.மேலும் இந்த இடுகைக்குப் பிறகு அவரை முற்றிலுமாய் புறக்கணித்து விடுவது என்கிற முன் தீர்மானங்களோடு இதை எழுதத் தொடங்குகிறேன்.தமிழச்சிக்கான பின்னூட்டங்களைக் கூட மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே எழுதத் தோன்றும். பெண் என்ற பிரத்யேக காரணங்களுக்கான சலுகையே இத்தனை நாட்கள் என் கடுப்பை தள்ளிப்போட்டதென்றும் சொல்லலாம்.எதுவிருப்பினும் தமிழச்சியின் தீரம் பாராட்டத்தக்கது.பெண்கள் இயங்கத் தயங்கும் ஒரு தளத்தை இவர் தேர்வு செய்ததற்காகவும் தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதல்களை புறந்தள்ளிக்கொண்டு போவதற்காகவும் தமிழச்சியினைப் பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் ஆபாசப் பின்னூட்டங்களை எவ்வித தயக்கங்களும் இல்லாமல் வெளியிடும் இவர் என் எதிர் கருத்து சார்ந்த பின்னூட்டத்தை வெளியிட மறுத்தது ஏன் எனத் தெரியவில்லை.ஒரு வேளை நான் ஆபாசமாக எழுதாமல் விட்டது புரியாமல் போனதோ என்னமோ..

  எப்போதாவது எழுதும் இவரது சொற்பமான சொந்த எழுத்துக்கள் இவரை அதிகார வர்க்கத்தின் குறியீடாகத்தான் அடையாளம் காட்டுகிறது. (தட்டுக்கழுவி முதல் தேவடியா வரையிலான சொல்லாடல்கள்) பெரிய டைப்பிஸ்ட் பெரியாரிஸ்ட் இல்லை என்கிற கொழுவியின் வாக்கியம் கச்சிதமாக இவருக்குப் பொருந்துகிறது.இந்த குற்றச் சாட்டிலிருக்கும் உண்மையை இவர் புரிந்துகொண்டாரா? எனத் தெரியவில்லை.அப்படிப் புரிந்துகொண்டிருப்பின் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதையும் இவர் எடுத்ததாய் தெரியவில்லை.பகுத்தறிவு வாதி என்கிற சக்தி வாய்ந்த ஒரு அடையாளத்தை மேம்போக்காக புரிந்துகொள்வதின் சரியான அடையாளம்தான் தமிழச்சியின் எழுத்து.பெருமதிப்பிற்குரிய பகுத்தறிவுவாதிகளே! உங்களுக்கான அடையாளங்கள் கீழ்கண்டவைகள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

  1.கருப்பு நிற ஆடை அணிவது..
  2.உடையில் பெரியார் அல்லது சேகுவாராவின் உருவத்தை பதிந்துகொள்வது
  3.தோழர்,புரட்சி,வெங்காயம் என்கிற சொல்லாடல்களை சம்பந்தமே இல்லாமல் திரும்ப திரும்ப பேச்சு வழக்கில் நுழைப்பது…
  4.எங்காவது ஓரமாக நின்று நோட்டிஸ் கொடுத்துவிட்டு பெரிய சீர்திருத்ததை செய்ததாய் புளகாங்கிதம் அடைவது,அதை போட்டோ எடுத்து கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பது..
  5.பெண்,பெண்ணியம் எனக் காதில் விழுந்த சொற்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நூல் விடுவது.

  நம்முடைய வாழ்வு,நம்முடைய மிகச்சிறந்த தலைவர்கள்,புனிதர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர் அனைவரும் சித்தாந்தங்களை அதன் சாராம்சத்தோடு புரிந்துகொள்கிறார்களா/கொண்டார்களா என விளங்கவில்லை. அவர்களை அடியொற்றியே நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டங்களைப் போல் ஜே! போட்டுப் பின் தொடர்கிறோம். தொடர்ச்சியான தலையாட்டல்களில்,வாழ்க! கோஷங்களில் சொந்த மூளை சிந்திக்கும் திறனை எப்போதோ இழந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.மேலும் சமீப காலங்கலாய் இவரது புரட்சித் தலைப்புகள் தாங்கி வரும் பெரியார் மற்றும் ஓஷோவின் உள்ளடக்கங்கள் அதன் மூலங்களை சிதைப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.ஓஷோவை நேசிக்கும் பெரியாரை நேசிக்கும் ஒருவன் இவ்வித வறட்டுக் கூச்சல்களால் சந்திக்க நேரிடும்
  பெரும் அசூசையை மொழியில் எவ்வாறு கடத்துவதெனத் தெரியவில்லை.

  தமிழச்சி இப்படித்தான் எழுதவேண்டும் என நான் எதையும் வலியுறுத்தவில்லை இருப்பினும் இவரின் அபத்தங்கள், அரைகுறைப் புரிதல்கள் ஏற்படுத்தும் எரிச்சல்கள் எழுத்தில் சொல்ல முடியாதது.இவை மட்டுமில்லாது தன்னை ஒரு இலக்கியவாதி என்றும் எழுத்தாளர் என்றும் இவரே சொல்லிக்கொள்வது வன்முறையின் உச்சம்.பெண்மொழி,இலக்கியம் என்றெல்லாம் இவர் பேசும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்ணின் மொழியைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ இவர் சொல்லி நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையில் இல்லை என்பது என் பதிவுகளையும் அவர் பதிவுகளையும் தொடர்ச்சியாய் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.பெண் என்பவள் பெண்ணால் மட்டும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதில்லை.சக பெண்ணை தேவடியா! என்றழைக்கும் கண்டவன் போகட்டும்! என விளம்பரப்படுத்தும் இவரின் சிந்தனைகளை விட பெண்ணை நான் ஓரளவு புரிந்துகொண்டுள்ளேன் என்பது ஆசுவாசத்தை அளிக்கிறது. பெண்மொழிகளை /உடல்மொழிகளை மொத்தத்தில் பேதமில்லா மொழிகளைப் புரிந்துகொண்ட சுகுணா போன்ற தமிழச்சியின் தோழர்கள் தமிழச்சியின் புரிதல்களின் எல்லைகளை ஓரளவிற்கேனும் விரிவுபடுத்தினால் என் போன்றவர்கள் சந்திக்க நேரிடும் அசூசை உணர்வு ஓரளவேனும் தவிர்க்கப்படலாம்.
  http://www.ayyanaarv.com/2008/01/blog-post_25.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s