-தர்மினி-

தங்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டபின்
மேசையின் கீழே

அவரவர் கால்களை முட்டிக் கொள்ளாமல் நகர்த்தி வைத்தனர்.

மேலே                                                                                                                                                                  அழகிய விரிப்பும் பூக்களும் வர்ண ஒத்திசைவோடு வைக்கப்பட்டிருந்தன.

கைகளில் எழுதுகோல்கள் மட்டுமே ஏந்தியிருந்தனர்.

இவர்கள்
சனங்களுக்காகப் பேசுவதாகச் சொல்லிச் சென்றனர்.
அவர்களுக்காக
தமது உயரங்களிலிருந்து கால்களையிறக்கிக் கதிரைகளில் அமர்ந்தனராம்.
உதடுகளை அசைத்தனர்.
துப்பாக்கிகளற்ற இடுப்புகளைத் தடவிக் கொண்டனர்.
தம் நலன்களைப் பெரும் படுதாக்களில் எழுதி(ச்)
சுவர்களில் விரித்துக் கண்ணசைவுகளால் படிக்கச் சொல்லினர்.
கரண்டிகள் கத்திகள் சத்தமெழுப்பாது சாப்பிட்டு
கைகளைக் குலுக்கி
நட்சத்திர விடுதிகளில் நித்திரை செய்தனர்.

அன்றிரவு தான்                                                                                                                            சிறையிலிருந்த நானும்                                                                                                      கைது செய்யப்பட்ட காரணமறியாதுசெத்துப் போனேன்.

Advertisements