மோனிகா-

பட்டுப் பாய்மரம் படர்ந்து விரிகிறது

காற்றைக் கிழிக்க.

எப்போதும் எனை இயக்கிக்

கெக்கலிக்கும் காற்றோ

அவ்வப்போது அணிதிரண்டு

அலைகழிக்கும் பாய்மரத்தை.

காற்றை நான் அறிவேன். அலைக்கழியும்

காரணங்கள் நானறியேன்.

எத்திசையும் செல்ல எத்தனமாயிருக்கின்றேன்.

திறம் படைத்த மாலுமியாய்

திசையினைக் கைக்கொண்டு

தேடியவை கைகொள்ள

தெரியாமற்போகலாம் உமக்குத்

தீண்டாததொரு தீவு.

கடற்பறவை நான்

காரணங்கள் துலைத்துவிட்டு

நீலத்தில் கரைந்தழிந்து

நிலம் மறக்கும் சாபம் வேண்டும்.

திக்குத் துலைத்தொழித்தல்

தேவை இருத்தலுக்கு.

Advertisements