தர்மினி

மற்றவர்கள் காண  முடியாத இரவில்                                                      நட்டநடுவில் சுழி பிடித்திழுக்க
சுற்றிப் புயலும் நீரும்
கரை தொட முடியா நான்.

என் கனவறியாத மற்றவர்கள்
அதைக்
காணத் தவறிய இரவில்

சருகைப் போல வெளியில் மிதந்து கொண்டிருந்த மனசுடன்     இல்லை……                                                                                                                                    அது ஒரு திறக்காத கடிதமாகக் கிழிபட்டு  ,                                                              பறந்த குப்பையாக  இருக்க

கரும் இருளில்                                                                                                                   காற்றுக்கு இலைஅசைவதைக் காண்பது
கடினம்
கண்கள் சொன்னது .

மீண்டும் கற்பனையில்
கனவொன்றை வரைந்து -ஆழத்தில் விழுதல்
எவரும் அறியா நேரம்

கிழித்துப் போட
எனக்கொரு கனவு கிடைத்தது.

Advertisements