தர்மினி

எப்படிச் சொல்வது?
பறித்துச் சென்றனரா?
என்னிடமிருந்து எடுத்துக் கொண்டனரா?

நான்                                                                                                                                                             அண்ணாந்து வானம் பார்த்து                                                                                           மழை தேடும் அனற் பூமி  மனசுக்காரி .

வாழ்வை மென்று சப்பித் துப்பி விட
வார்த்தைகளை விழுங்கத் தவித்து
ஏங்கிக் கிடக்கும் நான்.

இன்றுடன் முடிந்தது.
ஒன்றுமேயில்லை.
கறுப்பழிந்த பலகையது
எதுவும் எழுதப் படவில்லை.

புதிதாக என்ன?
பசி, நித்திரை, நோவு
காசு, காதல், சாவு….மற்றும் சில.
அப்படியே அவையாகட்டும்.

ஒரு வரி எழுதும் அந்தரிப்பில்
மூச்சுத் திணறிச் செத்தது
இன்றைய  கவிதை.

Advertisements