இந்திய அரசே!

–          காஷ்மீர் மக்கள் மேலான தாக்குதலை நிறுத்து!!

–          அருந்ததி மேலான தாக்குதலை நிறுத்து!!!

உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று புழுகிக் கொள்ளும் இந்திய அரசின் போக்கிரித்தனம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய அரசு கடந்த யூன் மாதம் தொடங்கிக் காஷ்மீரில் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களைப் படுகொலை செய்து மேலும் பல நூற்றுக்கணக்கானோரை மோசமாகக் காயப்படுத்தியது போதாதென்று அவர்களுக்கு ஆதரவாக எழும் குரல்களையும் முடக்கி வருகிறது.

காஷ்மீர் மக்களின் அசாடி (சுதந்திரம்) கோரிக்கையையோ அவர்தம் ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்கோ இன்றுவரை இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

காஷ்மீரில் இளையோர் சுதந்திரமாக நடமாடும் முறையில் எவ்விதத்திலும் இராணுவத் தளர்வும் ஏற்படுத்தப்படவில்லை. இதுவரை நிகழ்ந்த படுகொலைகள் சார்ந்து எந்த ஒரு குடும்பத்துக்கும் நியாயம் வழங்கப்படவில்லை. எந்த நீதிமன்றமும் அவர்களின் வழக்கை எடுக்கப் போவதில்லை. ஆனால் காஷ்மீரில் ஒரு கூட்டத்தில் பேசியதற்காக அருந்ததிராய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது இந்திய அரசு. தேசத்துக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கெதிராகத் தேசியவாதிகளையும் பாசிஸ்டுகளையும் கிளறி விட்டுள்ளது அரசு. அருந்ததிக்கு ஒரு பாடம் புகட்டப்போவதாகத் தற்போது ஆர்.எஸ்.எஸ் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது. அருந்ததியின் வீடு அவர்களால் தாக்கப்பட்டதற்கும் இந்திய அரசு தான் பொறுப்பேற்கவேண்டும்.

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகக் கதைத்து விட்டு யாரும் தப்பமுடியாது என்று சத்தமாக அறிவிக்கும் நடவடிக்கையிது. இந்திய அடக்குமுறைக்கு ‘இந்து’ பத்திரிகை உட்படப் பெரும்பான்மை ஊடகங்களும் ஆதரவு வழங்கிவரும் இந்நிலையில் நாம் பலத்த எதிர்ப்பைப் பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது.

வரும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்கு இந்தியத் தூதராலயத்துக்கு முன்பாக லண்டனில் நடக்கவிருக்கும் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒடுக்குமுறைக்கெதிரான அனைவரையும் அழைக்கிறது தமிழ் ஒருங்கமைப்பு.

காஷ்மீர் மக்களுக்கெதிரான அடக்குமுறையையும், தமிழ் ஒருங்கமைப்பின்  ஆதரவாளர்களில் ஒருவரான அருந்ததிராய்க்கு எதிரான வன்முறையையும் தமிழ் ஒருங்கமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய அரசின் வன்முறைக்கெதிராகத் திரள்வோம்.

எதிர்ப்புப் போராட்டம் : நவம்பர் 4 வியாழன் பி.ப 1.00
High Commission of India,
India
House,
Aldwych,
London WC2B 4NA

Nearest tubes: Holborn, Covent Garden, Temple and Charing Cross.
For further information contact Senan, international coordinator of Tamil Solidarity, on 07 90 80 50 217 or senan@tamilsolidarity.org
————————————————————————————————————————————————————

Advertisements