-மோனிகா

புலர் பொழுதின் தென்னங்கீற்றில்

தரிசித்த வாலாட்டிப் பறவை.

எரிக்காமல் ஒளிப்பகர்ந்து

சிலுசிலுப்பின் மஞ்சள் நிறப்பும்

அதிகாலைக் கதிரவன்.

என்றும் பார்க்கும் இச்சாலையில்

இன்று இனிமையை இரைத்துச் செல்லுமொரு

இருசக்கர வாகனம்.

வெளி இறங்கி நடக்கையில்

புல் தரை தரிக்கும் நட்சத்திப் பூக்கள்.

இவ்வழகுணர்ச்சிகள் யாவும்

இரவின் மழைக்கு நடுவே

என் இடை தொட்டதொரு

தீண்டலின் எச்சங்கள்.

புலன்களுக்கிடையே ஆங்காங்கு

புரிதலும் கிடப்பன போலும்.

Advertisements