தர்மினி

என் நாக்கு பிளந்து- அவை
இரு வேறு மொழிகளைப் பேசுகின்றன.
தஞ்சம் புகுந்த ஒரு அகதியின் மொழிகளவை.

அதிலொன்று இரந்து கேட்கிறது.
ஏழைகளின் உணவு விண்ணப்பத்தைப் பிழையாகப் படிக்கிறது.
அந்நியர்களுடன் சமரசம் செய்ய வார்த்தைகளைத் தேடுகிறது.
வெட்கித்துப் போகிறது.
மறுபக்கம் திரும்பி, என்னிடம் ‘நீயொரு அகதி” என்கிறது.

மற்றொரு நாவு
பொதுவெளியில ஒழிந்து கொள்கிறது
உயர்த்த முடியாத குரலுக்காக மெளனிக்கிறது
வீடும் வெளியும் வேடங்கள் புனையச் சொல்ல
அது சாத்திய கதவின் பின்னிருந்து
என் அழுகையை விம்முகின்றது.

Advertisements