மோனிகா

ஒரு மரம் பிரிந்து

மற்றது தழுவியவாறு

செல்லும் அதிகாலைப் பறவைகள்.

சொல்லாத சொற்களை ஒருவன் அடுக்க

ஆங்கதனை

இல்லாமற்போன சந்திப்புகளால்

தீயிலிட்டுக் கொளுத்தினாள் ஒருத்தி.

அதன் கரியில் காணாமற்போனது

கடக்கும் காலம்.

பகலென்றும் இரவென்றும் பாதைகள் சரிய

பெரும்பொழுது யாதிங்கு,

பெருகக் காலம் நம் கண்முன்னே?

எல்லாமும் பேசிய பின்

முன் பார்த்துப் பின் செல்லும் ஒரு உலோகப்பெட்டியினுள்

நான் நகர

அங்கு நானே ஆகிப்போவேன்

எனது வரலாறாக.

17-04-2011

Advertisements