நிலந் தொடாமல் மிதந்தேன்

உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக
மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது
நான் லேசாகி உதிர்கிறேன்

அலைகள் என்னை மோதுகின்றன
யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது?

திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின
எவர் அவற்றை என்னிடம் துரத்தியது?

யார் கரையில் என்னை வீசியது?                                            எவரது கைகளவை?

காணாமல் போகிறேன்
நீரோடு கலக்கிறேன்
கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில்
உறைந்து கிடக்கிறேன்
ஈரமண்ணாக.

Advertisements