முன் மறைத்து நிற்கும் அதுவொன்றின் பின் ஒழிதல் நலம். உண்மைகள் தெரியும் காட்சிகளைப் பார்க்க மறுக்கின்றன கண்கள். என் நிழலைத் தொடர்ந்து சிலரும்                                                      முகத்தின் எதிரில் பலருமாகக் கண்காணிப்புகள்.

விழுங்கிய வார்த்தைகளை                                                                                  சகித்துக் கொண்ட மனிதர்களை மறக்க முடியவில்லை.            ஒழித்து வைத்த  ஆயுதமாக                                                                                   பேனையைப்புதைத்தல் கடினம்.                                                                                                                                  அது முடியாப் போதில்                                                                                              தலை கலைத்து முகத்தை மூடிக்கொள்தல் இலகு.

நடுச்சாமம் ஆறுதலானது.                                                                                      எவரது விழிகளும் என்னைத் துரத்துவதில்லை.                                       இருளோ அழகாய்க் காட்சியளிக்கும்.                                                                என் குரல் மட்டும் மெலிதாய் விசும்பும்.

மரமொன்று குளிரில் இறுகி இலைகளை உதிர்ப்பதை பார்க்க, தனிமை குலைகிறது.                                                                                            நாளை என் நடைபாதையில் அவை கால்களில் ஒட்டும்.
நானும் அதை வாசலில் உதிர்த்து   கதவைப் பூட்டுவேன்.

தர்மினி

Advertisements