தொலையாத உரு

1326039023_297846077_1-Pictures-of--creative-painting-modern-art
மாற்றத்திற்கில்லை ஓய்வு.
அவ்வப்போது அடுப்புத்தணலாக மூண்டெழுகிறது வயிறு.
ஓசைகள் தெறித்ததிரும் காதுச்சவ்வுகள்.
எவரெவரோ என் கனவுகளைப் பயங்கரங்களாக்கி மறைகின்றனர்.
நித்திரை தரும் இரவுப் பூதம்.
அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது.
தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம் அருகில் வருகின்றன.
நாடுமில்லை
இருப்பதற்கொரு வீடுமில்லை
இது என் பெயருமில்லை
அடையாளங்களற்ற நான் அகதியுமில்லையாம்.
உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து படிகளின்றி இறங்க
யாருமற்ற காட்டுக்குள் என்புகளைப் பாம்புகள் நொருக்குகின்றன.
முன் குவிந்த ஆடைகளிலிருந்து எதுவொன்றும் அணிய முடியவில்லை.
கடிகார முட்களின் வேகம் குரூரத்தைக் குத்துகிறது.
அந்தரித்த  நித்திரையில் அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்.
அதுவல்லாப் போதில் அந்நியம் சுற்றிக் கிடக்கிறது.
‘எதுவும் எதுவும் எனதல்ல. அதுவும் இதுவும் எனதல்ல. இதுவும் அதுவும் எனதல்ல’
நீ அந்நியமானவள் என்கிறது இம்மொழி.
தோல்நிறம் நீ எவளோவெனச் சொல்கிறது .
இவை  உனக்கல்ல என்பதாக அலுவலகங்கள்.
மிரண்ட கண்களின் குற்றத்தால் அடையாளஅட்டை கேட்கப்படுகிறது.
தொலையட்டுமே என்று எறிபட்ட ஏதோ ஒரு உயிரினமாக
வீதிகளின் இருள் மறைவில் இன்னும் துலையாது அலைகிறது இவளுரு.
தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s