லண்டனில் நடந்து முடிந்த இலக்கியச் சந்திப்பின் இறுதி அமர்வி ல் ஏற்பட்ட விவாதங்களின் போது ‘பானுபாரதி என்ற பெயரில் முகப்புத்தகத்தில் கருத்துகளை அவரது துணைவர் தமயந்தி சீமோனே எழுதுவதாக ‘ பானுபாரதியை பெளசர் அவதூறு செய்தார்.

பானுபாரதி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் அரசியற் செயற்பாட்டாளரும் கவிஞரும் எழுத்தாளருமாவார். எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப்போராளியாக அவரது பொது வாழ்வு தொடங்குகின்றது. நோர்வேயில் 92இல் இருந்து வெளியாகிய ‘சுமைகள்’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும், தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘உயிர்மெய்’ காலாண்டிதழ் தொகுப்பாசிரியராகவும் இயங்கி வருகின்றார். உயிர்மெய் வெளியீடாக அண்மைக் காலங்களாக பல தோழர்களுடைய நூல்களையும் பதிப்பித்து வருகிறார். தவிரவும் நோர்வேயில் நடைபெற்ற 28வது இலக்கியச் சந்திப்பை முன்னின்று நடத்தியவரும் அவரே. பிறத்தியாள் என்ற இணையத்தளத்திலும் தன் பதிவுகளைத் தொடர்ச்சியாக இடுகின்றவர். அவரது கூர்மையான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத தருணத்திலேயே பெளசர், பானுபாரதியின் பெயரில் எழுதுவது அவரது துணைவரே என்ற மழுங்கிய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். பொதுவெளிக்கு வரும் பெண்களை ஒதுக்கித்தள்ளக் காலங்காலமாக ஆணாதிக்கவாதிகள் இத்தகைய தந்திரங்களைக் கடைப்பிடித்தே வருகிறார்கள்.

இதைக் கண்டித்து, எம்மால் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்த தமிழ்ப் பெண் படைப்பாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு  ஒரு கூட்டறிக்கையூடாகப் பெளசருக்குத் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னரும் சில பெண் படைப்பாளர்கள் இணைந்து கொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இவ்வாறாக 30 பெண்படைப்பாளர்கள் இதிலிணைந்து கொண்டனர். இக்கண்டன அறிக்கை வெளியாகிப் பத்து நாட்கள் கழித்து, சில படைப்பாளிகள் தங்களது கையெழுத்துகளை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘நடந்த விடயம் முழுமையாகத் தெரியவில்லை, இது குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் கிடைக்கப் பெறுகிறோம்” என்பதாக இருக்கிறது. அவர்களது சந்தேகங்களிற்கான காரணங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே வேளையில் அவர்களது சந்தேகங்களைப் போக்குவதும் நமது கடமையாகிறது.

ஏறக்குறைய 50 பேர்களுக்கு அதிகமாயிருந்த அவையில் பெளசர் பகிரங்கமாகக் கூறிய அவதூறு இது. நடந்த சம்பவத்திற்கு அங்கிருந்த அனைவருமே சாட்சியங்கள். அங்கிருந்த யாராவது இதை மறுத்தால் அவர்கள் பெளசரின் ஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஒத்தூதுபவர்கள் மட்டுமே. இனி இவர்களிற்கு பொதுவெளியில் பெண்ணியம், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் கதையாட எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.   நீண்ட காலமாக புகலிட இலக்கியப்பரப்பில் இயங்கிவருபவரும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டவருமான உமா முகப்புத்தகத்தில் கூறும் சாட்சியத்தைக் கவனியுங்கள்: “40 வது இலக்கியச் சந்திப்பின் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் நான் கலந்து கொண்டேன். இறுதி நிகழ்ச்சியான அடுத்த இலக்கியச்சந்திப்பிற்கான இடத் தெரிவு நிகழ்ச்சியின்போது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கையில் நடாத்துவது பற்றி எழுந்த விவாதத்தின் போது 40வது இலக்கியச்சந்திப்பு பற்றி முகநூலில் எழுதப்பட்ட கொமெண்ஸ் (comments) பற்றி பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவற்றை எழுதுபவர்கள் இலங்கையில் இலக்கியச்சந்திப்பு நடாத்துவதற்கு ஆதரவு தருபவர்களே இதை செய்வதால் இவற்றை மேற்கோள் காட்டி இலங்கையில் சந்திப்பை நிகழ்த்துவது தடுக்க முயற்சிகள் செய்யப்பட்டது. அந்த வேளையில் கருத்துத் தெரிவித்த பவுசர், பானுபாரதியின் பெயரில் தமயந்தி சைமன் எழுதும் கொமென்ஸ் எனக் குறிப்பிட்டார். இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவதைத் தடுக்க பல குற்றச்சாட்டுகளும், கருத்துகளும் முன்வைக்கப்பட்ட போதும், அவற்றிற்கெதிரான கருத்துகளை கூறுவதற்கான சூழலும், நேரமும் அங்கு நிகழவில்லை. இத்தகைய கருத்து அங்கு கூறப்படவில்லையென்று இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு ஆணோ பெண்ணோ கூறுவரானால் அது பொய்யானது.”

நிர்மலா ராஜசிங்கம் அறியப்பட்ட பெண்ணியலாளரும் நீண்டகாலக் களச்செயற்பாட்டாளருமாவார். அவரது சாட்சியத்தையும் கவனியுங்கள்:
I am sorry I am unable to write in Tamil as I am not at home. I very rarely sign such appeals. I did sign only after verifying it with several persons who were present at the Ilakkiya Santhippu who told me of the proceedings and that Fauzer did indeed make a simple, bold and bald statement to the effect that it is Thamayanthy who writes in Banubharathy’s name. There are a whole host of witnesses to this. If someone is trying to sweep it under the carpet now or say that Fauzer did not make such a statement – then that is a lie, according to many of my sources. This was a publicly made statement and has to be opposed on its own.
My partner Ragavan spoke to Fauzer and had advised him to issue an apology and just conclude the matter and not let it drag out. During this conversation Fauzer had admitted that he had made this statement. It was made during a heated moment when Fauzer was making an emotional pronouncement and he may have lost control and said something publicly which he may not have done if the atmosphere had been calmer. I believe that he had been nursing a hunch, a suspicion but then in the heat of the moment had let it slip and made it into a public statement. I think that is what happened. Fauzer is certainly not someone who makes wilful, hateful comments about women the way Saaththiri does , the person Fauzer invited to speak at the Ilakkiya Santhippu. While stating that I find his ‘suspicion’ ‘hunch’ about Banubharathy incorrect, people have these hunches about all kinds of people and events. But these remain hunches and suspicions and should not become public pronouncements. If Fauzer did not make such a public pronouncement , then he would have immediately denied that he had made this statement when Banubharathy sent out the video appeal for support. But he did not. Fauzer should be called to account, and at the same time supported by all of us his friends, to do the right thing and apologise to Banubharathy and finish the matter. In my opinion if Fauzer does this Banubharathy will have closure on this and they can both shake hands on it and become fellow travellers again.   

இந்தச் சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதில் நமது தோழிகளிற்கு என்ன மனத்தடையிருக்க முடியும்? நடக்காத ஒன்றை பெளசர் மீது சுமத்தி அவரைக் கண்டிப்பதற்கு நமக்கு என்ன அவசியம் இருக்க முடியும்? இதற்கு அப்பாலும் முழுவிபரங்களையும் தோழிகள் அறிய விரும்பினால் அன்று இலக்கியச் சந்திப்பில் விவாதங்களைப் பதிவு செய்த ஒளிநாடாவிலிருந்து முழு விபரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த ஒளிநாடா பெளஸர் வசமேயிருக்கிறது. அதை அவர் வெளியிட்டால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அவர் அந்த ஒளிநாடாவை வெளியிடுவது நல்லது.
‘இலக்கியச் சந்திப்பில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை’ எனச் சில கருத்துகள் தெரிவிக்கப்படுவது உண்மைதான். முள்ளிவாய்க்காலில் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை, விழுப்புரத்தில் இருளர் இனப் பெண்கள் காவற்துறையால் வன்புணர்வு செய்யப்படவேயில்லை என்றெல்லாம் தினம்தோறும் எத்தனையோ அப்பட்டமான பொய்ச் செய்திகளை எதிர்கொள்ளும் நமது தோழிகளிற்கு ஆணாதிக்கத்தின் அரூபப் பொய்க்கரங்களைக் குறித்து நாம் விளக்கத் தேவையில்லை. முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியா சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காணொளியை, “கிராபிக் செய்து வெளியான பொய்யான சாட்சியம்” என்றுதான் இன்றுவரை இலங்கை அரசு சொல்கிறது. அதற்காக நாம் இசைப்பிரியாவின் கொலையைக் கண்டிப்பதை ஒத்திவைத்துவிட்டோமா என்ன! முரணான செய்திகளைச் சீர்தூக்கி ஓர் நிலைப்பாட்டுக்கு வருவது சரியா அல்லது பொய்ச் செய்திகளின் நிழலில் இளைப்பாறுவது சரியா எனத் தோழிகள் தயவுசெய்து யோசிக்க வேண்டும்.
‘வேறுவிதமான செய்திகளைக் கேள்விப்படுகிறோம்’ எனச் சொல்லும் தோழிகள் இது குறித்து சம்மத்தப்பட்ட பெளசரின் பதில் என்ன? என ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்டன அறிக்கை வெளியாகி 2 வாரங்கள் கடந்தும் இது குறித்து பெளசர் ஏன் மவுனம் சாதிக்கிறார் எனத் தோழிகள் கேட்க வேண்டும். இவ்வளவிற்கும் அவர் இன்றுவரை தொடர்ச்சியாக இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் .

பானுபாரதிக்கு அநீதி இழைக்கப்பட்டு அவரது சுயம் அவமானப்படுத்தப்பட்டதற்கு நீங்கள் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், இக் கண்டன அறிக்கையே ஒரு தவறான அறிக்கை, பானுபாரதி ஒளிநாடாவில் வெளியிட்ட குற்றச்சாட்டுப் பொய்யானது என்ற தொனியில் நீங்கள் சொல்வது பானுபாரதியை இரட்டிப்பாக அவமதிப்புச் செய்வதாகும்.
எங்களது தரப்பில் நாங்கள் எங்கள் தரப்பு உண்மைகளைப் பேசிவிட்டோம். பெளசரிடம் உண்மையிருந்தால் அவரது தரப்பு உண்மைகளை அவர் பேச என்ன தடை என்று தோழிகள் சிந்திக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு விடயத்தில் முதற் கண்டனமோ ஆதரவோ தெரிவிப்பதற்கான அடிப்படை கருத்தியல் சார்ந்ததே. துல்லியமாக விபரங்களைத் திரட்டிய பின்பு தான், நாம் வாயைத் திறக்க முடியுமெனில் நாம் எந்த விடயத்திலும் வாயைத் திறக்காமலிருக்கவே விதிக்கப்பட்டுள்ளோம்.
-தர்மினி -பானுபாரதி

 21.04.2013
Advertisements