Image

– மோனிகா-

பருந்துகள் அமர வான் விழுங்கும்

கழுவு மரங்களிலிருந்து

நழுவிச் செல்லும் மேகங்கள்

காட்டு யானையாய், கர்ஜிக்கும் குதிரையாய்

உருக்கொண்டு.

நெடிதுயர்ந்த மரமல்லியின்

நிழல் தடுப்பதற்காய் சுழல் பெருக்கும்

நீரோடை தனக்கும்

உயரத்தில் பொறாமை கொண்டு.

செம்மண் பூமியில் மழையடித்து

உதிரம் ஓட

மழைத்துளிகளிடையே நினையாமல்

கடந்து செல்வான் ஒரு நாடோடி.

அது அவனுக்கு மட்டுமே வாய்த்த இரகசியம்.

Advertisements