– மோனிகா

Image

பிரம்மாண்டமான ஒரு கோபுரம்

கிளற்றும் பயத்தைத் தடுக்க

அதனடுக்குகளில் சிக்கிக் கிடக்கும்

சில நுட்பங்களைக் கண்ணுற்று

மனத்திலிருத்தினால் போதும்.

 

ஆளை விழுங்குவதாக ஆர்பரித்து வரும்

பேரலையை ஏற்க வேண்டினால்

ஒரு அடி பின் நகர்த்தும் மணல் தளத்தில்

இருந்தால் போதும்.

 

ஆனால், அது ஏனோ

பிரபஞ்சத்தில் பேருண்மைகளிலும் அறிவுத் தேடலிலும்

லயித்திருக்கும் சமூகத்தினிடையே

தனியொருவனின் அவமானங்களை

நினைவினடுக்குகளிலிருந்து

தகர்ப்பது மட்டும்

இன்றும் நிறைவேறாததொரு

நிதர்சனமாகவே சமைந்துவிட்டது.

அது ஆண்டைகளிடையே

நிலைகொண்டுவிட்டபடியால்.

ஓவியம்: சி.டக்ளஸ்

Advertisements