வாசனை

'Yayoi Kusama: Look Now, See Forever' Exhibition View


வியர்வை வாசம் கொஞ்சம்.
கழுத்தோரம் ஊத்தைப் பிசுபிசுப்பு.
அலுமாரியின் உடுப்பு அடுக்குகளிடையில் ஒளித்து வைத்திருக்கிறேன்.

எனை நேர் பார்த்த விழிகளின் சந்திப்பை இழக்க விரும்பாத போதில், தீண்டத் தவித்த என் விரல்களின் நடனத்தில்   மேசையில் நுரைத்தபடியிருந்த மதுவில் சில துளிகள்  ஆடையில் சிந்திய மணம் பரவுகிறது.

நமக்கு நடுவில் ததும்பி வழிந்த நேசத்தின் மிச்சமாகக் கசப்பும் சுழித்து இறங்கியது என் நெஞ்சினுள்.

பூக்கள் தெளித்துவிட்ட மெலிதான அச்சட்டை கசங்கித் தான் கிடக்கிறது.
மலர்வதும் சுருங்குவதுமான என் மனதின் மற்றொரு வடிவம் போலது.

காற்றுத் தடவிக் கலைந்திடுமோ அம்மாலைப் பொழுதென அலுமாரி திறந்தெடுத்து நீவிச் சிறிது சுகந்தமுணர்ந்து
சிறுபிள்ளை போல மறைத்து வைக்கிறேன்.

இரு கைகள் பரவி என் முதுகு படர்ந்து                                                   நெஞ்சணைத்த நேசம் பூசிக்கிடக்கும் அதைத் தண்ணீரில் கழுவி  வண்ணங்களைக் கலைக்க என் மனம் ஏவுமோ?

-தர்மினி-

One thought on “வாசனை

  1. Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல…
    நம் குரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s