இரவோடு

john-atkinson-grimshaw-midsummer-night-80837

வழமை போலத்தான் வீட்டுவேலைகள்
கிழமை நாட்கள், ஞாயிறு, சனி வேறில்லை.
எப்போதும் உப்பில்லாச் சவ நாட்கள்
அவ்வப்பொழுதில்
வெருட்ட வெருட்ட ஒருத்தி அவளுள்ளிலிருந்து பிய்ந்து பறப்பாள்
எட்டிப்பிடிக்க இவளுக்கு விருப்பெதுவுமில்லை
உள்ளிருந்து அய்யோ என்றொரு -அம்மாக்குரல்- எழும்பும்
தட்டிப் பறந்தலையும் பாதியிவள்
கள்ளமாய் சில செய்வாள்
கசங்கிய கடதாசியில் கிறுக்குவாள்
தனிமையின் நாவுகளுடன் தொலைவுக்கு கதை சொல்வாள்.
அப்பாதியவள் ஒன்றாகி மெய்யிலும் மெய்யாகி அப்போது உருவாவாள்
கரி இருளில் எவர் பார்ப்பார் இவள் கனவுகளின் சரி பிழைகளை.
***********************************************************************
தனிமையும் மென்னிருளும் தருகின்ற சுதந்திரம்
காகிதமும் மையுமாக என்னோடு இரகசியம்
கறுப்பு-வெள்ளைப்படப் பாடல்கள்
உறங்காமல் கழிக்கும் இரவு
எவரும் இடை வராத நேரம்
மெழுகுதிரி உருகிவிட்டது
உங்களை இடையூறு செய்தமைக்கு மன்னிப்பு.
-தர்மினி-

 

2 thoughts on “இரவோடு

  1. இரவுகள் பற்றி தமிழில் மிக சிறந்த பிரதியை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்…. இரவை உணர்வது என்பதும், அதில் கிடைக்கும் விடுதலை என்பதும், நம் சுயம் நமக்கே தெரிவது என்பதும்… இரவின் அடர்தியை காட்டிலும் கெட்டியானது.. அதனை வார்த்தைகளாக தரிசிக்கும் போது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s