IN OUR TRANSLATED WORLD
‘IN OUR TRANSLATED WORLD’ என்ற தொகுப்பில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை , இந்தியா மற்றும் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து  78 கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் நான் எழுதிய ‘முத்தக்காடு’ கவிதை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஒரு பகிர்வு.
           Field of Kisses
She asked him for
just one kiss
her body melting in those words.
Breaking waves
now on her lips.
Dreams expanding into
poems.
“Just one kiss” now a mantra
of pervasive love;
tired of waiting
slowly the sentence
shed its words;
finally, leaving her
with a void, he said,
let this become a poem or
a small dream;
her body now 
a desolate field of kisses.
-Tharmini-

 

முத்தக்காடு

அவனிடம்
ஒரேயொரு முத்தந் தரக் கேட்டபோது-அது
அவளைச் சிலிர்க்க வைக்கும் வசனமாயிருந்தது.

தவித்துப் புரளும் அலைகளை
உதடுகள் உணர வைத்தது.

விரிந்து சென்ற கனவுகள் ஊடாக
கவிதைகளை எழுதித்தந்தது.

‘ஒரேயொரு முத்தமென்ற’வாக்கியத்தை
உலக அன்புப் பிரதி என்று மொழிந்தாள்.

காத்துக்களைத்து
மெதுமெதுவாக எழுத்துக்களாக
உதிர்ந்தது வசனம்.

முடிவிலது
வெறுமையை ஒரு நாள் விட்டுச் செல்கையிலே
அதுவொரு
குறுங்கவிதையாகவோ
சிறுகனவாகவோ போகட்டுமே என்றான்.

அவளுடலோ முத்தக் காடாய்க் கிடந்தது.

தர்மினி

Advertisements