பகலில் ஒலிக்காத கடிகாரச் சத்தம் பெரிதாகிப் பெரிதாகி….

அதை மட்டும் உற்றுக் கேட்கிறேன்.

கதவு நீக்கி

குளிர் ஒதுக்கி

வானைத் திறந்து பார்த்தால்,

அங்கு நிலவில்லை.

நட்சத்திரங்களில்லை.

கொஞ்சிச் சென்ற கன்னத்தின் தண்மை போன்றொரு சிறு வெண்முகிற் துண்டு தன்னுமில்லை.

கருங்கூடாரம் விரித்த இச்சாமம் என்னைக் கதைகதையாகக் கேட்கிறது.

முகம் முகமாய் மின்னித் தெறிக்கும் இந்த இரவும்

பேசித் தணிந்த குரலின் கனிவும் கண்கள் கசிய நினைவும்

எத்தனை சொல்லி என்ன?

என்னைச் சுற்றி மிதந்தலையும் இறகுகள்
இரகசியமாக வந்தலைகின்றன.

நீங்கள் அனைவரும் உறங்கிவிட்டீர்கள்!

இப்போது நேரம் அதிகாலை இரண்டு மணி 8 நிமிடங்கள்.

தர்மினி 

நன்றி : எனில்? இணையசஞ்சிகை

Advertisements