புஷ்பராணி கவிதைகள்

printemps-arbre-fleur

உள்ளமெங்கும் பூச்சொரிய…

கருத்திழந்து நின்றதெல்லாம்

கனவாகிப் போனதென்று

பெருந்துயரம் கொண்டதுண்டு.

பின்னாளில் வந்துவிட்ட

முரண்களினால் மனம் கசந்து

வெறுத்தொதுங்கி நின்றதெல்லாம்…..

உன் மறைவு கேட்ட நொடி

பொய்யாகிப் போனதிங்கு.

சீறுகின்ற காற்றினிலே

பரவுகின்ற தீயாக

தெறித்தெரியும் நினைவுகளை

இத்தனை நாள் எங்கு வைத்தேன்?

எவரெவரோ உன் நினைவைப் பகிர்ந்துருகிக் கலங்கி நிற்க

அன்றொருநாள்…..

உன்னருகில்

கவிதையாக நின்றவள் நான்.

கருத்து விட மனமின்றிக் கலங்குவதை அறிவாயோ?

விழிகளிலே பெருகுவது ….கண்ணீரா?  உன் நினைவா?

துளித் துளியாய் நினைவடுக்கில்

புதைத்துவைத்த பெருங்கனவின்

மறு பிம்பம் கண்முன்னே

விருட்சமெனக் கிளை பரப்பி

கண் மூடாதிரவுகளின்,

கடுஞ்சாட்சி நானென்று

உயிர் பெற்று வதைப்பதென்ன

நீறாகி மண்ணுள்ளே

கலந்தானபின்னும்

மணம் வீச மறுக்குமோ

வாச மிகு நினைவுகள்.


 பார்வையின் நிறங்கள்

அகன்றோங்கும் விழியழகு
விரிந்தொளிரும் தோள் அழகு
மின்னுகின்ற வெண்மையிலே
மனதையள்ளும் பல் வரிசை

கழுத்தழகு கவின் தெறிக்கும்
மார்பழகும் ,பின்னழகும்
வர்ணிக்க வார்த்தையில்லை
இடையழகோ அப்பப்பா….
பளபளக்கும் தோல் அழகில்
பெருமை பெறும் கறுப்பழகு

நீண்ட விரல் அத்தனையும்
பிசிறில்லா வடிவமைப்பு
தொடையழகும் கால் அழகும்
எவருக்கும் இல்லையிங்கு
திடமாக ஓங்கி நிற்கும்
தோற்றமது மிக அருமை
கடைந்தெடுத்த சிலைகள் எல்லாம்
வியந்து நோக்கும் உடலமைப்பு.

இவர்கள் போல் முழு வடிவும்
அமையவில்லை வேறெவர்க்கும்
ஆபிரிக்கப் பெண்களைத்தான்
அவனியிலே அழகென்பேன்.
ஒவ்வொருத்தர் பார்வையிலும்
அழகுக்குப் பல நிறங்கள்.

எனக்கும் பிடிக்கும்

குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்
அவர் மென்னுடல் தடவி மகிழ்தல் பிடிக்கும்

மழலைகள் பேச்சில் கிறங்குதல் பிடிக்கும்,
மழையென முத்தம் சொரிவதும் பிடிக்கும்,
என் பிள்ளைகள் பிடிக்கும். சூர்யா பிடிக்கும் (என் செல்ல நாய்க்குட்டி)
எழுதப் பிடிக்கும் ,படிக்கப் பிடிக்கும்
புத்தகங்கள் பிடிக்கும் ..பிடிக்கும்……..பிடிக்கும்…
இனிய கனவுகள் தொடரப் பிடிக்கும்
அதன் நினைவுகள் கூட மீட்டல் பிடிக்கும்

ஒளியின் சிதறல் காணப் பிடிக்கும்,
இருளின் கருமை அதுவும் பிடிக்கும்
உறக்கம் வந்து தழுவுதல் பிடிக்கும்
தூங்கா இரவு நீளுதல் பிடிக்கும்

காடு கரம்பை சுற்றுதல் பிடிக்கும்,
அதில் தெறிக்கும் வெப்பம் சுடுவதும் பிடிக்கும்
இயற்கையின் அழகு எல்லாம் பிடிக்கும்
அதைப் புகைப்படமாகப் பார்க்கவும் பிடிக்கும்

மனதையுருக்கும் கவிதை பிடிக்கும்

அதை எழுதிய மனதின் துள்ளல் பிடிக்கும்
சமையலில் இறங்கும் பரவசம் பிடிக்கும்
சுவை தரும் உணவை உண்ணப் பிடிக்கும்
அழகழகாக உடுத்தப் பிடிக்கும்

உடுத்தபின் என்னை இரசிக்கப் பிடிக்கும்

இசையின் இனிமை பருகிடப் பிடிக்கும்

திரைப்படம் நன்றாய் இருந்தால் பிடிக்கும்

துணிகள் துவைப்பது என்றும் பிடிக்கும்
துவைத்தபின் தெறிக்கும் சுகந்தம் பிடிக்கும்
மரஞ்செடி கொடிகள் வளர்ப்பது பிடிக்கும்
தினமும் அவற்றில் மயங்குதல் பிடிக்கும்

மலர்கள் இறைக்கும் வாசம் பிடிக்கும்
அவை எழிலினைத் தீற்றி மலர்வதும் பிடிக்கும்
செல்லம் கொஞ்சும் நாய்கள் பிடிக்கும்
அவைதரும் அன்பின் வருடல் பிடிக்கும்
பாம்பினை நீக்கி விலங்குகள் எல்லாம் பார்ப்பது பிடிக்கும்….தொடுவதும் பிடிக்கும்

தொல்லைகள் நீங்கித் தனித்ததும் பிடிக்கும்
அது தரும் சுதந்திரம் அள்ளுதல் பிடிக்கும்.

3 thoughts on “புஷ்பராணி கவிதைகள்

  1. ஆழமான சிந்தனை
    அருமையான கவிதைகள்
    அன்போடு வாழ்த்துகின்றேன்
    அல்லாஹ்வ்ன் துணையால் தொரட்டும்
    அன்புத தோழி உங்கள் கவி ஊற்று !

  2. நீண்ட வருடங்களின் பின் நான் எழுதிய கவிதைகள் இவை .உங்கள் பாராட்டுக்களும் அன்பும் என்னை இன்னும் ..இன்னும் கவிதை புனையத் தூண்டுகின்றது. என் மன எழுச்சியின் வெளிப்பாடுகள் மனதில் புதைந்து போகாமல் எழுத்துருப் பெறுவதற்கு ஊக்கு சக்தியாக உங்கள் கைகுலுக்கல் உற்சாகப்படுத்துகின்றது. நன்றி…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s