புஷ்பராணி-

Free-shipping-high-quality-pants-faux-denim-legging-personalized-print-multicolour-hot-sale-women-s-shiny

நேரமின்மையால் முகநூலை அவசரமாகத் திறந்துபார்த்தால், பெண்கள் பலரின் ஆவேசமான லெக்கிங்ஸ் பற்றியபதிவுகளே முன்னுக்கு வந்தன. குமுதம் ரிப்போர்ட்டர் அட்டையை பிறகு தான் பார்த்தேன்.இன்னும் பலரின் ஆத்திரம் கொப்பளிக்கும் நியாயமான பதிவுகளும் இந்தக் கேவல புத்திகொண்ட வக்கிரருக்கு உறைக்குமா தெரியவில்லை..

அது தானே…. எல்லாப் பெண்களும் கொதிப்பதுபோல, பெண்களின் உடைபற்றித் தீர்மானிக்க இவர்கள் யார்? பெண்களை ஊடுருவிப் பார்த்துகொண்டு இந்த ஆண்கள் அலைவதுபோலப் பெண்களும் அலை பாய்ந்து கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினால், வேறொருவர் குறிப்பிட்டது போல ஆண்கள் பாவாடை கட்டித் திரிந்தால் தான் பார்க்க நல்லாயிருக்கும்.

இந்த ஆண்கள் கோவில்களில் அரை நிர்வாணமாக …..அதாவது மேற் சட்டையில்லாமல் தங்கள் மார்பு,வயிறு காட்டி நின்று வணங்கும்போது வராத கூச்சம் , பெண்களின் உடைகளைப் பார்த்தவுடன் பொங்கிப் பிரவாகிக்கின்றதோ இத்தகைய ஆண்களுக்கு .

வயல்களில் வேலைசெய்யும் ஆண்கள் கோவணத்தோடும் வேலை செய்வார்களாம் …இந்தக்கோலத்தில் பெண்கள் தங்களை இரசிக்கவேண்டும் என்ற இரகசிய ஆசைகூடப் பலருக்கு உண்டு. ஆனால் பெண்கள் ஆண்களின் பார்வைக்கு அஞ்சி இப்போதெல்லாம் தங்கள் உடைக்குமேலே ஆண்களின்  சட்டைகளை நன்றாகப் பூட்டி அணிந்து கொள்கின்றார்கள் …. பல இடங்களில் பெண்கள் இப்படிச் சீருடைபோல் அணிந்து வேலை செய்வதைப் பார்க்கலாம்.எல்லாம் கெட்ட ஆண்களின் விரசப் பார்வையைத் தவிர்ப்பதற்காகவே.

பெண்களின் அங்கங்கள் ஆபாசமானவை என்றால் ஆண்களின் உறுப்புகள் எல்லாம் தங்கங்களா?..அவர்கள் மட்டும் இறுக்கிப் போடுவது எதற்காகவோ….முதுகு தெரிய…கழுத்துத் தெரிய…வயிறு..தெரியப் புடவையில் வலம் வருவதை விட லெக்கின்ஸ் அணிவது எந்தவகையில் இந்தப் பண்பாட்டுக் காவலர்களுக்கு [?] உறுத்தி வலிக்கச் செய்கின்றது.

லெக்கிங்ஸ் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. .அனேகமாக எல்லாப் பெண்களும் வெளிநாடுகளிலும் இதைத்தான் அணிகின்றார்கள் … வசதிகருதி ..இவ்வளவு நாட்களும் இதை நான் பெரிதாகக் கவனிக்கவில்லை. இன்றுதான் பஸ்ஸுக்குக் காவல் நிற்கும்போது பெண்களைக் கவனித்தேன்… அனேகமாக எல்லோரும் லெக்கிங்ஸ் தான் அணிந்திருந்தார்கள் …பிடித்ததை…வசதிப்பட்டதைப் போடுகின்றார்கள்.யாரும் ஆடையணிய வகுப்பெடுப்பதில்லை.

எனவே பெண்களும் எவ்வித உறுத்தலுமின்றித் தம்பாட்டில் போய்க்கொண்டே இருக்கின்றார்கள். வீதிக்கு வீதி…மதவுக்கு மதவு வேலைவெட்டியின்றிக் குந்தியிருந்து பெண்களின் ஆடைகள் எங்கே விலகுகின்றது….எங்கே காற்றுக்குப் பறக்கின்றது என்று கூர்ந்து பார்த்து வீண் கேலி பேசும்  அசிங்கம் பிடித்தவர்களைப்போலவே குமுதம் ரிப்போட்டரும் தன் கேவல புத்தியைக் காட்டியிருப்பது மிகவும் அருவருப்போடு கூடிய கண்டனத்துக்குரியதாகும்!

Advertisements