நிசப்த எதிரொலி !
என் அறை
தாங்காத அதிர்வில்
உம் சொற்களைப் பற்றிக் கொண்டேன்.
ஞாபகம்
ஞாபகமாய்
வரி
வரியாய்
தலை இறுக்கிச் சுற்றிக் கிடக்கின்றன
வார்த்தைகள்.
களைப்பாயிருக்கிறது
நான் உறங்கவா?

 

தர்மினி

Advertisements