அள்ளக் கைகளற்ற பெருவெளியில்
எண்ணாமல் கொள்ளாமல் எடுத்தெடுத்து வீசினேன்.

இடைவழியில்….
அந்தரத்தில் தொங்கி நடமிடுகின்றவை போக,

வானை அண்ணாரும் போதெல்லாம்
மின்னி மின்னிக் கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் ஒளியதிர்வில் நடுங்க
பல ஓடியொளிந்து கொள்கின்றன.

இன்னும் சில விர்றென விரைந்தேகி
எங்கோ தொலைகின்றன.

விட்டெறிந்த சொற்களில்
ஏதாவது…..
விலாசம் கண்டறிந்து வீடடைந்தா சொல்லும்!

தர்மினி

Advertisements