ஒரு பெண்ணின் பணி முடிவடைகின்றது

marieTakvamநோர்வேஜிய மொழியில் :மரிய தக்வாம்
தமிழில் :பானுபாரதி
எனது
குழந்தைகள் எங்கே?
அழகாக ஆடையணிந்து
அந்நிய மனிதர்போல்
என்னிடம் வந்திருக்குமிவர்கள்
இன்று
தங்களது பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். முன்பொருகால்
இவர்களது பிஞ்சுக்கரங்கள்
எனது
கழுத்தைக் கட்டிக்கொள்ள போட்டியிட்டன
குட்டி இதழ்களென்னை முத்தமிட
ஆவலாய்த் துடித்தன.
ஐந்து தடவைகள்,
ஒவ்வொரு தடவையும் ஒன்பது மாதங்கள்
குமட்டலும், வாந்தியுமாய் அவதிப்படுத்தியது. சமையல்கட்டின் பல்வேறு வாசனைகள்
என்னை சூழ்ந்துகொண்டு அழுக்குரைத்தன.
கண்ணாடியில் தெறிக்குமென் உருவமோ
பொங்கிய, புளித்த மா போன்றிருக்கும்.
எனது முகம் வெளிறித் தெரிந்து
அடையாளம் தொலைந்து போனது.
ஓ கடவுளே……..
படுக்கையறையிலும்
குழந்தைகள் பணியிலும்
எனது காலங்கள் கரைந்தனவே.
எனது இரத்தத்திலும் சதையிலுமிருந்து
ஐந்து உயிர்களை வெளியே தந்தேன்
இன்றோ
ஐந்து அந்நிய மனிதர்களை தரிசிக்கிறேன்.
ஒவ்வொரு பிரசவத்தின்போதும்
உடலம் தளர்ந்து வலுவிழந்து போயினேன்.
எனது வயிறோ
ஒரு பை போன்று தொங்கியபடி
அடுத்த தடவைக்காக காத்திருந்தது
எனது மார்புகள்
பசித்த உதடுகளால் உறிஞ்சப்பட்டன.
முலைக்காம்புகள்
கடுத்த புதுப்பற்களால்
கடித்துக் கசிந்தன.
எனது மடி
அழுக்கான உடைகளுடனும்,
அழுகை நிறைந்த குழந்தைகளாலும்
நிரவிக் கிடந்தது.
எனது முகம்
அவர்களின்
முத்தங்களாலும் கண்ணீராலும்
ஈரம் காயாதிருந்தது.
எனது சர்வாங்கமும் திருமணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது.
————————————————————————-நோர்வேஜிய பெண்ணியக் கவிஞரான மரியெ தக்வாம் (Marie Takvam) 1926ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் திகதி நோர்வேயின் வடகிழக்குப் பகுதியில் ஒர்ஸ்தா என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். 1952இல் இவரது முதல் கவிதை வெளியீடான «ஏழு நட்சத்திரங்களின்கீழ் திருமுழுக்கு» பிரசுரமானது. 1952ம் ஆண்டிலிருந்து 1997ம் ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் 13 கவிதைத் தொகுப்புகளையும், இரண்டு நாவல்களையும், சில நாடகப் பிரதிகளையும் படைத்துள்ளார். 97இற்கும் 81இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு திரைப் படங்களிலும் நடித்துள்ளார். வாழ்க்கையோட்டம், காதல், மனிதப் பருவங்கள் போன்ற விடயங்களை தனது கவிதைகளின் கருப்பொருளாய்க் கொண்டிருந்தார். இவரது அநேகமான படைப்புக்கள் சமூகத்தைப் பற்றிய கடும் விமர்சனங்கள் கொண்டதாய் விளங்குகின்றன. பொதுவாக மரியாவின் எல்லாக் கவிதைகளும் வாழ்வுக்கும், மரணத்துக்குமிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன. வாழ்வின் தத்துவத்தை விளக்குவது இந்த இளவேனில் என்பது இவரது கவித்துவமான கருத்து.

உயிர்நிழல்-22, ஜனவரி 2006

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s