பக்கத்து வீட்டுப் பிள்ளையோ?
கதவைத் தட்டியது குளிர் தான்

இப்படித்தான்
ஒரு குளிர் நாள்
இடைக்கிடை வந்துவிடுகிறது.

பனிக் காலச் சோம்பல்
குளிர் நாளின் சோகம்
மற்றும்

கோப மனம் சேர்த்து
போர்வையால் எனை மூடிவிட்டால்
ஒரு பொழுது உறங்கலாம்!

தர்மினி

Advertisements