மெல்லென ஒளி கசிந்த
வான மூலையின் கீழ் நின்றிருந்தேன்.

பெருவிரலை முத்தமிட்ட
ஒரு துளிப் பனி
சருகில் தளும்பிக்கொண்டிருந்தது.

உடைந்து விடும் தருணத்தில்
குரல் மினுங்கக் கேட்டது,
பாறையான என்னை
ஏன் பனித் துளியாய் மாற்றினாய்?

அதை
எப்போதோ முத்தமிட்ட என் நறுமண உதடுகளால்
இப்போது செய்யக்கூடியது ஒன்று தான்.

அச்சருகை இரு கைகளில் ஏந்தி
அத்துளியை அருந்தினேன்.

தர்மினி

நன்றி : மலைகள்.கொம்

Advertisements