12768380_1663247750616008_5045434841350132213_o
நாட்களைக் கழித்தால்?
குழந்தை தேவையற்ற பக்கங்களை
ஒவ்வொன்றாய்
கிழித்தபடியிருக்கிறாள்
புத்தகத்தில் மிச்சமாய் பின்னட்டை மட்டும்
ஒன்றொன்றாய்…
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்தபடி…
கிழித்தபடி…….
இதோ மிச்சமாக,
தனியாக நானும் இக்கணமும்.
விலக்கப்பட்ட கனி

பாதி அப்பிளையாவது
தின்னத் தந்திடுவாள்….
ஆதாம் ஒளிந்து கொண்டான்.
அவளோ,
முழுப் பாவத்தையும் தானே கட்டிக் கொள்வதாக
கடவுளிடம் செய்த ஒப்பந்தத்தோடு
அவனையழைக்கிறாள்.
அவள் கைகளில்
விலக்கப்பட்ட கனி.

கனவுக்குள் நுழைதல்
உங்கள் உறக்கத்தின் கதவைத் தட்டினேன்
திறபடவில்லை.
ஒரு நிமிடம் கனவுக்குள் நுழைந்து
கதைத்து விட்டு வரவேண்டும்.
இல்லையெனில்,
நீங்கள் பலியெடுக்கச் சொன்ன தேவதையிடம்
என் வாழ் நாளை நீடிக்கச் சொல்க!
 தர்மினி

நன்றி : அம்ருதா பெப்ரவரி 2016

Advertisements